
லியு சியென் சன் இந்த கல்லூரியில் சாதாரண மாணவி. 15 வயதில் நோய்வாய்பட்ட அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் கால் வெட்டி எடுக்கப்பட்டாலும் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள வில்லை. விடா முயற்சி மூலம் 32 வயதில் அவர் சாசன் உயர் கல்வி நிலையத்தின் சிறப்புக் கல்லூரியின் இசை மற்றும் அரங்கேற்ற துறையில் சேர நுழைவு தேர்வில் வெற்றி பெற்று மாணவியானார். இங்கே அவருடைய இசை திறமை வெளிப்பட்டது மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.
ஒவ்வொரு புதிய கல்வி ஆண்டிலும் கலை நிகழ்ச்சி கொண்டாட்டம் நடத்த நான் ஏற்பாடு செய்கின்றேன். கல்லூரி நிர்வாகம் எனக்கு ஆதரவளித்துள்ளது. தாராளமாக இத்தகைய முயற்சி செய்யுங்கள். நடத்துவதற்கு தேவைப்படும் செலவுக்கு கல்லூரியால் பொறுப்பேற்கும். வெளியே நடந்து செல்ல கஷிடமாயிருந்தால் கல்லூரி உனக்கு கார் வசதி தரும் என்று கல்லூரி நிர்வாகம் எனக்கு சொன்னது. நான் கல்லூரியின் உதவியுடன் ஊமை மாணவர்களுக்கு வழிகாட்டி அரங்கேற்றிய "பச்சுமையான நிலம்"என்ற நடனம் நாட்டின் பல்கலைக்கழக மாணவர்களின் கலை போட்டியில் முதல் விருது பெற்றது. நான் கற்றுக் கொண்ட தொழில் திறமை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றார் அவர்.
1 2 3 4
|