
கல்லூரியின் முதல்வர் சௌ லி ச்சுன் இது பற்றி விளக்கினார். கடந்த பல ஆண்டுகளாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு கல்வி பயிலும் சிறந்த சூழலை வழங்கியுள்ளது. தற்போது கல்லூரியில் திரைப்படம் காட்டும் கருவி, திவிதி கருவி கொண்ட பல்வகை மேம்பட்ட கருவிகளை பயன்படுத்தி கல்வி கற்பிக்கப்படுகின்றது. அவர்களுக்கு ஏற்ற பல்வகை சாதனங்கள் கொண்ட பரிசோதனை அறைகளும் நிறுவப்பட்டன. இது பற்றி அவர் கூறியதாவது பரி சோதனை அறைகளில் பார்வையற்றவர்களின் கணிணிக் கூடம் வாய் பேசாத காது கேளாத மாணவருக்காக கணிணி கூடம் சர்வதேச இணையத்துடன் நேரடி இணைப்பு பெற்ற இணைய தளக் கூடம் ஆகியவை எங்கள் கல்லூரியில் உள்ளன. தற்போது உலகின் 13 நாடுகள் இந்த இணையத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. இந்த நாடுகளில் உள்ள மாணவர்கள் ஒரே நேரத்தில் இடத்தில் இருந்த படியே கணிணி மூலம் பாடம் கற்கலாம்.
1 2 3 4
|