தவிரவும் கல்லூரியில் 2 லட்சம் புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஒன்றும் உள்ளது. பார்வையற்றோருக்கான 7000க்கும் அதிகமான நூல்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வையற்ற மாணவர்களின் தேவையை இது நிறைவு செய்கின்றது.
பார்வையற்ற மாணவி லியு ரேய் மேற்கு சீனாவில் உள்ள சூங்சிங் நகரிலிருந்து வந்தவர். கல்லூரியில் பொருத்தப்பட்டுள்ள நல்ல கல்வி சாதனங்களுடன் அவர் நாள்தோறும் வசதியாக கல்வி கற்கின்றார். மேலும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் காட்டும் அகக்றை அவரை மனமுருகச் செய்தது. இது பற்றி அவர் கூறியதாவது.
சில சமயங்களில் சாதாரண மனிதருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நான் பார்வையற்றவன். ஆசிரியர்கள் மற்ற மனிதருடன் பழகுவது போலவே எங்களுடன் பழகுகின்றார்கள். மனிதரின் முழுமையான திறமை எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எங்களை கோருகின்றார்கள். நாங்கள் மனிதரின் திறனைப் பெற்ற பின் மேலும் உறுதியான மனத்துடன் வாழ்க்கையை எதிர்நோக்க முடியும் என்றார் அவர்.
1 2 3 4
|