
கல்லூரியில் ஊனமுற்ற மாணவர்களுக்கு சிறந்த சூழல் உருவாக்கப்பட்ட போதிலும் அவர்களின் உடல் குறையின் காரணமாக வெளியிடத் தகவல்களை பெறுவது மிக குறைவு. ஆகவே எப்படி வெளி உலகிற்கும் அவர்களுக்குமிடையில் தொடர்பை வலுப்படுத்தி கல்வித் தரத்தை உயர்த்துவது கல்லூரி ஆசிரியர்களின் கடமையாகும். மாணவர்களின் கல்விப் பணிக்குப் பொறுப்பான லியு ஹாய் ஹென் அம்மையார் இது பற்றி ஆழமாக உணர்ந்துள்ளார். அவர் கூறியதாவது
சாதாரண மாணவர்களை பொறுத்தவரை ஒரு விஷயம் பற்றி ஒரு முறை விளக்கினால் அவர்கள் உடனடியாக புரிந்து கொள்வார்கள். ஆனால் வாய்பேச முடியாத மாணவர்களிடம் அப்படியே நடக்க முடியாது. கை மொழி மூலம் அவர்களிடம் விளக்கும் போது சில சமயங்களில் தாளில் எழுத வேண்டும். முன்பு கை மொழி எனக்கு தெரியாது. மாணவர்களுடன் பழகி சாதாரண வாழ்க்கையில் அவர்களுடன் கை மொழி மூலம் பேசக் கற்றுக் கொள்கின்றேன் என்றார் அவர்.
1 2 3 4
|