
சீன நகரங்களின் வளர்ச்சியோடு, நகரங்களிலுள்ள குடியிருப்புப் பகுதிகளின் கட்டுமானம் நாளுக்கு நாள் பக்குவமடைந்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் அங்கு வாழும் மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்குவது மட்டுமல்ல, இக்குடியிருப்பு மக்களின் பொது நலன் பற்றிய கருத்தும் வலுப்பட்டு வருகிறது. குடியிருப்புப் பகுதிகளை இணக்கமான தாயகமாக அமைப்பதற்காக மக்கள் அனைவரும் பாடுபடுகின்றனர்.
இளைஞர் பூங்கா என்ற குடியிருப்புப் பகுதி, சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஜி நான் நகரில் அமைந்துள்ள ஒரு பழைய குடியிருப்புப் பகுதியாகும். ஒரு சதுர கிலோமீட்டருக்குட்பட்ட இந்தப் பகுதியில், 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் பழைய வீடுகளில் வாழ்கின்றனர். வீடுகள் சிறியதாக உள்ளன. பல வீடுகளில் நிலக்கரி வாயு குழாய் பொருத்தப்படவில்லை. ஒருங்கிணைப்பாக வழங்கப்பட்ட வெப்ப வாயுவும் இல்லை. வாழ்க்கைத் தரம் ஓரளவுக்கு மோசமானது. ஆனால், இந்த பழைய குடியிருப்புப் பகுதிதான், 2006ஆம் ஆண்டில் சீனப் பெருநிலப்பகுதியில் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான குடியிருப்புப் பகுதி என புகழைப் பெற்ற முதலாவது குடியிருப்புப் பகுதியாக மாறியுள்ளது.
1 2 3 4
|