
குடியிருப்பு மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை வழங்குவதற்கு சளையாத முயற்சிகளை மேற்கொண்ட குடியிருப்புப் பகுதியைப் பாராட்டுவது, இந்தப் பாராட்டின் நோக்கமாகும்.
பழைய குடியிருப்புப் பகுதியில் ஏற்படக் கூடிய ஆபத்தைத் தவிர்க்கும் பொருட்டு, 2002ஆம் ஆண்டில் இருந்து, இளைஞர் பூங்கா குடியிருப்புப் பகுதியின் குடியிருப்பு மக்கள் கமிட்டியின் 40க்கு அதிகமான பணியாளர்கள் பல வேலைகளைச் செய்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், பொதுவாக குடியிருப்பு மக்கள் சிலர், நிலக்கரி வாயு கலன்களையும் நிலக்கரி அடுப்பையும் சிறிய சமையல் அறையில் வைத்திருந்தனர். எரியூட்டும் போது, நிலக்கரி வாயுக் கசிவு ஏற்பட்டால், பின்விளைவு கடுமையாக இருக்கும். இத்தகைய நிலைமைக்கு எதிராக, குடியிருப்பு மக்கள் கமிட்டியின் பணியாளர் அனைவரும் பாதுகாப்பு பற்றிய பொது அறிவு தொடர்பான பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். பின்னர், அவர்கள் வீடு வீடாகச் சென்று குடியிருப்பு மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
1 2 3 4
|