
பாதுகாப்பு மற்றும் ஆபத்துத் தடுப்பு துறையில் இளைஞர் பூங்கா குடியிருப்புப் பகுதி குறிப்பிடத்தக்கது. சீனாவின் இதர நகரங்களிலுள்ள பல குடியிருப்புப் பகுதிகளின் கட்டுமானங்களும் சிறந்ததாக உள்ளன.
பெய்ஜிங்கில் அமைந்துள்ள சிங் ஹுவா சி லி என்ற குடியிருப்புப் பகுதியில், வாங் சுங் பிங் அம்மையார் ஒவ்வொரு நாளும் சிரமதானமாக நாயின் கழிவுகளைத் துப்புரவு செய்கிறார். அவர் இவ்வாறு செய்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தாம் நாய் கழிவுகளைத் துப்புரவு செய்வதைக் கண்ட பின், நாய்களின் உரிமையாளர்கள் தங்களது சரியற்ற செயல்களை முன்முயற்சியுடன் மாற்றியுள்ளனர் என்பது, வாங் சுங் பிங் அம்மையாருக்கு மகிழ்ச்சி தருகிறது.
வாங் சுங் பிங் போன்று குடியிருப்புப் பகுதிக்கு சிரமதானமாக சேவை புரியும் குடியிருப்பு மக்கள், பெய்ஜிங்கிலுல்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகளிலும் காணப்படுகின்றனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் குடியிருப்பு மக்களுடன் சேர்ந்து இணக்கமான குடியிருப்புப் பகுதிகளை உருவாக்குவதற்காக பாடுபடும் நிகழ்வுகள், தற்போது சீனாவின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளிலும் காணப்படலாம். 1 2 3 4
|