
இதன் மூலம் குடியிருப்பு மக்களின் விழிப்புணர்வு பெரிதும் உயர்ந்துள்ளது. பாதுகாப்பு பற்றிய அறிவு அவர்களின் வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் துங் குய் லான் அம்மையார் பேசுகையில், முன்பு தீ விபத்துத் தடுப்பு பற்றி அறிந்து கொள்ளவில்லை என்றும், தற்போது பாதுகாப்பு பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொண்டுள்ளதாகவும் கூறினார்.
தீ விபத்து தடுப்பு தவிர, குழந்தைகள் எதிர்பாராத வகையில் காயமுறுவது, குடும்பத்தில் வன்முறைச் செயல், போக்குவரத்து விபத்து முதலியவற்றைத் தடுப்பதில் இந்தக் குடியிருப்புப் பகுதி பல வேலைகளைச் செய்துள்ளது. எடுத்துக்காட்டாக, குடியிருப்புப் பகுதியின் குழந்தைகள் காப்பகத்திலும், கட்டிடங்களுக்கிடை இணைப்புப் பகுதிகளிலும், இரண்டு சிறந்த சறுக்குப் பலகைகள் பொருத்தப்பட்டன. பொது நாட்களில் அவை குழந்தைகளின் விளையாட்டுக்குப் பயன்படுகின்றன. அவசர நிலைமை ஏற்படும் போது, அவை தப்பிச் செல்லும் மீட்பு வழியாகவும் பயன்படுத்தப்பட முடியும். கட்டிடங்களிலுள்ள குழந்தைகள் அவற்றின் மூலம் விரைவில் வெளியேறலாம்.
1 2 3 4
|