• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-09 15:55:06    
வெளிநாட்டில் கொரிய இன விவசாயத் தொழிலாளர்கள்

cri

Zhao Rong Haoஇன் அயலார் Han Su Zhenவுக்கு இவ்வாண்டு 40 வயது. அதிதுவக்கத்தில் Xin Fa வட்டத்திலிருந்து தென் கொரியாவுக்குச் சென்று பணி புரிந்திருந்த விவசாயிகளில் அவரும் ஒருவராவார். அவரது மாமியார் தென் கொரியாவின் சியோல் நகரவாசி. Han Su Zhenவும் அவரது கணவனும் அடிக்கடி சியோல் நகருக்குச் சென்று முதியோரைப் பார்த்துள்ளனர். கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டுகளில் தம்பதிகள் சியோலில் கட்டிடப்பொருள் வியாபாரம் செய்யத் துவங்கினர். படிப்படியாக வியாபாரம் விறுவிறுப்பாகி வருமானம் அதிகரித்து வந்த போதிலும், பள்ளிகளில் கல்வி பயிலும் மூன்று குழந்தைகளுக்காக இருவரும் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டது.

Han Su Zhenஇன் கருத்தில் அவரது மூன்று குழந்தைகள், எதையும் விட மேலானவர்கள். குழந்தைகள் பிறந்தது முதல் அவர், அக்குழந்தைகள் மீது மிகுந்த கவனம் செலுத்தி, அவர்களின் வாழ்க்கை முழுவதையும் பராமரித்தார். குழந்தைகளைச் சீராக கவனித்தால் தான், அவர்கள் திடகாத்திரத்துடன் வளர முடியும் என்று அப்போது அவர் கருதினார். இருப்பினும், தென் கொரியாவில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த பின், அவர் தம் கருத்தினை மாற்றினார். சிறு வயதிலிருந்தே குழந்தைகள் தற்சார்புத் திறனைப் பெறச் செய்தால், வளர்ந்த பின், அவர்கள் மேலும் சீராக வளர்ச்சியடைய முடியும் என்று அவர் புரிந்து கொண்டார். இக்கருத்து மாற்றத்துக்குக் காரணம் என்ன? செய்தியாளரிடம் பேசுகையில்,

"தென் கொரியாவில் பிள்ளைகள் 18 வயதான போது, வெளியே போய் தற்சார்புடன் வாழ வேண்டும் என்று தாய்தந்தையர் கூறுவார்கள். அங்கு ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் வீட்டில் தங்காமல் பணி புரிய வெளியே செல்வார்கள். நான் நாடு திரும்பிய பின் குழந்தைகளிடம் இது பற்றிச் சொன்னேன். என்னுடைய இரண்டாம் மகள் கல்லூரியில் பயின்ற போது, கோடைக்கால விடுமுறையில், வீட்டுக்கு திரும்ப கூடாது என்றும், சொந்தமாகப் பணிபுரிந்து பணம் கட்ட வேண்டும் என்றும் மகளிடம் கூறினேன்" என்றார்.

1 2 3 4