• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-18 16:40:36    
தாமதாமான உறக்கம், தாமதமான கண்விழிப்பு

cri

பின் தூங்கி முன் எழுவாள், குடும்பப்பெண். இதுதான் பொதுவாக பெண்களிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. அதாவது வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து அனிஅவருக்கும் தேவையானவற்றை முன்னரே தயார் செய்து வைத்து விட்டு, மற்றவர் தூங்கச் சென்றபின் தான் தூங்கச் செல்லவேண்டும், அதே வேளை சேவல் கூவுவதற்கு முன்பே விசித்து, சமையல் தொடங்கி மற்ற அனைத்து வீட்டு வேலைகளையும் ஆரம்பிக்க வேண்டும். இது எதிர்பார்க்கப்படுவது ஒருபுறம் என்றால், பலரது வாழ்க்கையே கூட இந்த ஒரு சுழற்சிக்குள் மாட்டிக்கொண்டு உருண்டு கொண்டிருக்கிறது என்ற உண்மை மறுபுறம். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினரைக் கேட்டுப்பாருங்கள், பிந்தூங்கி முன் எழுவதெல்லாம் சரிப்படாது என்று சொல்வார்கள். அவ்வளவு ஏன், தினமும் தமதமாக கண் விழித்து, தங்கள் சொந்த வேலைகளைக்கூட எந்த ஒரு அவசரமுமின்றி செய்து பின் வெளியே புறப்பட்டுச் செல்லும் பாணியை விரும்புபவர்கள்தான் இன்றைக்கு அதிகம். பொதுவாக சோம்பேறிகள், குறிக்கோள் இல்லாத தற்குறிகள், எந்த பயனுமற்ற, உருப்படாத பிறப்புகள் என்ற பட்டங்களைச் சூட்டிக்கொள்ளும் இத்தகையோர் இப்போது எதிர்த்து கொடிபிடிக்கத் துவங்கியுள்ளனர்.

எதை எதிர்த்து கொடிபிக்கிறார்கள் என்று கேட்டால், "அதிகாலையிலேயே கண்விழிக்கும் மக்களின் அராஜகத்தை, கொடுங்கோண்மையை" என்கிறார்கள் டென்மார்க் நாட்டிலுள்ள பி சொசைட்டி அதாவது பி சமூகம் என்ற அமைப்பினர்.

1 2 3 4