• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-18 16:40:36    
தாமதாமான உறக்கம், தாமதமான கண்விழிப்பு

cri

டென்மார்க் நாட்டில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என்ற பணி நேரம் பரவலாகக் காணப்படுகிறது. இந்த பணிப்பண்பாட்டை எதிர்த்து கொடிபிடிக்கும் இந்த பி சமூக அமைப்பினர், தாமதமாக எழுந்து, தாமதமாக வேலைக்குச் செல்ல விரும்புபவர்களாவர். இவர்கள் கூறுவது, கோருவதும் என்னவென்றால், 11 மணிக்கு வேலைக்கு வந்து, இரவு 8 மணிக்கு வீடு திரும்ப அனுமதிக்கவேண்டும் என்பதே. அமைதியான காலைப்பொழுது வேண்டும், செய்தித்தாளை எந்த அவசரமுமின்றி படிக்கவேண்டும், பதட்டமின்றி நாளை கழிக்கவேண்டும், இதன் மூலம் ஒவ்வொரு நாளும் அமைதியாக அமையவேண்டும் என்பதே இவர்களின் வாதம்.

இதையெல்லாம் கேட்டு ஒப்புக்கொள்ள மக்கள் இருப்பார்களா? என்ற ஐயம் நமக்கு எழும். ஆனால் இந்த பி சமூகம் என்ற அமைப்பு துவங்கிய 4 மாதங்களில் 4800 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனராம். இந்த அமைப்பை உருவாக்கிய அந்த மகா சோம்பேறி யார்? எப்படி இதுபோன்ற யோசனை அவருக்கு தோன்றியது?

இந்த அமைப்பை உருவாக்கியவர் பெயர் கமீலா க்ரிஸ். இவர் பணி மற்ரும் வாழ்க்கை இடையிலான சம்நிலை பற்ரி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

தங்களது முயற்சி பெரும் வெற்றி பெற்றுவருவதாகக் கூறும் அவர், பின்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் இத்தகைய பி சமூகத்தினரின் இயக்கங்கள் சூடு பிடித்துள்ளன, உலகளவில் இதற்கான ஆர்வமும் அதிகரித்து வருகிறது என்றார்.

டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரம் தாமதமாக எழும் நபர்களுக்கென வேலைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது. டென்மார்க் நாட்டின் குடும்ப நலத்துறை அமைச்சர் கரீனா கிரிஸ்டென்சென், இந்த பி சமூக அமைப்பினரின் பரப்புரைக்கு பக்கபலமாக குரல் கொடுக்கிறார். நமது வாழ்க்கை ஒரு கடிகாரத்தின் எச்சரிக்கை மணியால் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் நாம் சற்று நன்றாகவே வாழ இயலும் என்பதே அவரது வாதம். நியாயம்தானே..??

1 2 3 4