• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-18 16:40:36    
தாமதாமான உறக்கம், தாமதமான கண்விழிப்பு

cri

மனித உடலில் காணப்படும் கார்டிசால் என்ற இயக்குநீர், மன அழுத்தம் தொடர்புடையது. இந்த கார்டிசால் இயக்குநீர், அதிகாலை கண்விழிப்போரிடம் அதிக அளவிலும் தாமதமாக விழிப்போரிடம் குறைந்த அளவிலும் இருப்பதாக வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ஏஞ்சலா க்ளோ கூறியுள்ளார். இதை ஆமோதிக்கும் ஜெர்மானிய ஆய்வாளர்கள், கார்டிசால் அளவிலான அதிகரிப்பு மூளைச்செல்களை பாதித்து முதுமையை முன்னதாகவே வரவைத்துவிடுவதாக கூறுகின்றனர்.

சராசரியா 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால் சிலருக்கு 6 மணிநேரத்துக்கு குறைவான தூக்கமே போதும். வேறு சிலருக்கு 10 மணி நேரத்துக்கு மேல் தேவைப்படுகிறது. எனவே ஒரே நேரத்தில் 10 மணி நேரம் தூங்குவது என்பதை விட குட்டித்தூக்கம் எனப்படும் மதிய வேளைத் தூக்கம் கூட உதவும் என்கிறார் தூக்கமின்மை பற்றிய மையம் ஒன்றின் மருத்துவர் ஏட்ரியன் வில்லியம்ஸ்.

ஆக தூக்கம் என்பது அனைவருக்கும் அவசியம். தூக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் பணியிலும் சோடை போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தாமதமாக கண் விழிப்போர் கொஞ்சம் இன்னலாக இருந்தாலும் விழித்து மதிய வேளையில் குட்டித்தூக்கம் போட்டு சமாளிக்கலாம். இந்தியா சீனா போன்ற வேளான்மை முக்கியத்துவம் கொண்ட நாடுகளில் தாமதமாக கண் விழித்து வேலைக்கு செல்வதெல்லாம் நடைமுறைக்கு ஏற்றதல்ல.


1 2 3 4