• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-18 16:40:36    
தாமதாமான உறக்கம், தாமதமான கண்விழிப்பு

cri

தாமதமாக எழுவதும், அதிகாலையிலேயே எழுவதும் ஒருவரின் சோம்பேறித்தனம் மற்றும் விருப்பத்தின் பேரில்தானே என்று கேட்டால், நமது கண் மற்றும் தலைமுடியின் நிறம் எப்படி மரபியல் ரீதியாக நிர்ணயிக்கப்படுகிறதோ, அதைப்போலத்தான், அதிகாலையில் விழிப்பதற்கும், தாமதமாக விழிப்பதற்குமான தனிநபரின் விருப்பமும், தெரிவும் மரபியல் ரீதியாக அமைகிறது என்கிறார் முனைவர் கமீலா. பி சமூக மக்கள் அதாவது தாமதமாக கண் விழிக்கும் மக்கள், நள்ளிரவு தாண்டி அதிகாலை 2 மணி வரை கூட கண்விழித்திருக்க முடியும் ஆனால் காலையில் சீக்கிரம் கண்விழிப்பது அவர்களுக்கு இயலாதது. ஏ சமூக மக்கள் அதாவது அதிகாலையில் கண் விழிக்கும் மக்கள், காலை வேளையின் புத்துணர்ச்சியை விரும்புவார்கள் ஆனால் இரவு 10 மணிக்கெல்லாம் தொலைக்காட்சி பார்த்தபடியே குறட்டை விடுவார்கள்.

ஆய்வாளர்களின் கருத்துப்படி 10 விழுக்காட்டினர், அதிகாலைச் சேவல்கள். 10 விழுக்காட்டினர் நள்ளிரவு ஆந்தைகள். எஞ்சிய 80 விழுக்காட்டினர் இந்த இரண்டு வகைகளுக்கும் இடையிலான நேர அலகில் சிதறியுள்ளனர். வல்லுனர்களின் கருத்துப்படி இதில் மரபணுக்களே முக்கியத்துவம், சோம்பேறித்தனம் அல்ல எனப்படுகிறது. அறிவியலாளர்கள் நீண்டகாலமாகவே அறிந்த ஒன்று, தாமதமாக கண் விழிப்போருக்கும், அதிகாலையிலேயே கண்விழிப்போருக்கும் மரபணு ரீதியில் வேறுபாடுகள் உண்டு என்பதாகும். பீரியட் 3 என்ற மரபணு அதிகாலை கண்விழிப்போருக்கு நீண்டும், தாமதமாக கண்விழிப்போருக்கு குறுகியும் இருப்பதாக சர்ரே பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.

1 2 3 4