• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-02 18:29:28    
ஒலிம்பிக்கில் புதிய தொழில்நுட்பங்கள்

cri

"ஒரு பட்டனைத் தட்டிப்புட்டா, இரண்டு தட்டுல இட்டிலியும், காபி நம்ம பக்கத்தில் வந்திடனும்" இந்த பழைய திரைப்படப் பாடல் வரிகள் இளம் தலைமுறையினருக்கு தெரியாமல் போகலாம். ஆனால் தெரிந்தவர்களுக்கு அதில், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும் அவரது துணைவியார் டி. எம். மதுரமும் இணைந்து தொழில்நுட்பம் எப்படி முன்னேறுகிறது என்பதையும், அதை எப்படி வீட்டுப் பயன்பாட்டுக்கு ஏதுவாக்க வேண்டும் என்பதையும் கேலியாக பாடுவார்கள் என்பதை அறிவார்கள்.

அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும்நமது வாழ்வில் இரண்டறக் கலந்து நிற்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாம், மனிதன் கண்டறிந்த பல்வேறு நுட்பங்கள், சாதனங்களின் ஒரு பகுதியே. எஞ்சிய பெரும்பகுதி இன்னும் பரவலான பயன்பாட்டில் ஈடுபடுத்தப்படாமல் உள்ளது.

பொதுவாக இத்தகைய தொடில்நுட்பங்கள் மற்ரும் அறிவியல் வளர்ச்சிக்கனிகளை இதற்கென சிறப்பாக நடத்தப்படும் பொருட்காட்சிகளில் காணலாம், கேட்டறியலாம். பரவலான பயன்பாட்டில் அவை எப்போது வரும் என்பதுதான் நாம் அறியாத தகவல்.

ஆனால் இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்ரங்கள் அறிமுகப்படுத்தப்படும் ஒரு முக்கிய தளமாக, ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அமைந்துள்ளது.

1 2 3 4