• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-02 18:29:28    
ஒலிம்பிக்கில் புதிய தொழில்நுட்பங்கள்

cri

விளையாட்டு உலகமும், அறிவியல் உலகமும் சந்தித்தால், எல்லாமே சாத்தியம் என்கிறார்கள். உதாரணமாக கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியின் போது வெப்பத்தையும், வியர்வையையும் தவிர்க்கும் காலணிகள். நீச்சல் வீரர்களுக்கு நீரில் பாய்ந்து செல்லும் சுறாவின் தோலை ஒத்த தொழில்நுட்பம் கொண்ட நீச்சலுடைகள் இவையெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டன. 2008 பெய்சிங் ஒலிம்பிக்கில் எத்தகைய புதிய தொழில்நுட்பங்கள் அரங்கேறும்? உதாரணத்துக்கு இரண்டைச் சொல்லலாம். செல்லிடபேசி தொலைக்காட்சி சில்லுகள், எத்தகைய வேடமணிந்து அடையாளத்தை மறைக்க முயன்றாலும் கண்டுபிடிக்கும் எண்ம அடையாள வருடிகள். இவை உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், பெய்சிங் ஒலிம்பிக்கையும், மக்களின் வாழ்க்கையையும் மேலும் சுவை கொண்டதாக, ரசனையுள்ளதாக மாற்றும் என்கிறார்கள்.

ரசனையுள்ளது என்பது சரி, சுவை கொண்ட ஒலிம்பிக்கா?

ஆமாம். ஒலிம்பிக் போட்டியின்போது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கென, சீனாவில் விளையாத ஏறக்குறைய 100 வகை காய்கறிகள் தற்போது பெய்சிங் உணவு அறிவியலாளர்களால் பெய்சிங்கிலேயே உரிய மாற்றங்கள் செய்து விளைவிக்கப்படுகின்றன.

ஆக நீலகிரியில் மட்டுமே கிடைக்கும் குறிப்பிட்ட வகை கிழங்கு கூட பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் போது பெய்சிங்கில் காணக்கிடைக்கலாம். உணடு சுவைக்கவும் கிடைக்கலாம். எடுத்த உடனே உணவு தானா? சாப்பாட்டு ராமன் போல?

1 2 3 4