• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-02 18:29:28    
ஒலிம்பிக்கில் புதிய தொழில்நுட்பங்கள்

cri

செப்டம்பர் 11, உலக வர்த்தக மையக்கட்டிடத் தகர்ப்புக்கு பிறகான, பயங்கரவாத அச்சுறுத்தல் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒலிம்பிக் போட்டி அனைத்துலக சமூகத்தின் சங்கமமாக, ஒன்றுபட்ட திருவிழாவாக அமைந்துள்ளதால், இதன்போது எந்த அசம்பாவிதமும் நடவாமல் தவிர்க்க, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.

ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள், அதிகாரிகள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திம் இம்முறை ஒரு கருவி பொருத்தப்படும். ஒருவரது முகத்தின் அமைப்பை முக எலும்பின் அமைவை துல்லியமாக பதிவு செய்யும் படப்பதிவு கருவியின் துணையில் உள்ளே வருகின்ற நபரின் முகம் பதிவு செய்யப்படும். பின் அது குறியீடுகளாக மாற்றப்பட்டு, ஏற்கனவே கோப்பிலுள்ள இத்தகைய முகங்களின் குறியீடுகளோடு ஒப்பிடப்படும். பொருந்தாதவரை கதவு திறக்கும். பொருந்தினால் கதவு திறக்காது, காவல்துறை வந்து கைது செய்யும்.

சீன அறிவியலாளர் மா சின், இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் கூட்ட நெரிசலில் உள்ள ஒரு தீவிரவாதியைக்கூட துல்லியமாக இக்கருவி கண்டுபிடிக்கும் என்கிறார். தலையில் பொய் முடியும், கண்களில் கண்ணாடியும், ஏன் உண்மையிலேயே உடல் எடை கூடியும் இருந்தாலும் இந்தக் கருவி சரியாக அடையாளத்தை கண்டுபிடிக்கும். மா சின், சின அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் உறுப்பினர்.

1 2 3 4