வாகனத் தொழிற்துறை, முக்கியமான ஒரு தொழிற்துறையாகும். ஒரு நாட்டின் தொழிற்துறை மயமாக்கம் ஏதோ வகையில் வாகனத் தொழிற்துறையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, சீனா அதன் சொந்த வாகனத் தொழிற்துறையை வளர்ச்சியுறச் செய்யப் பாடுபட்டுவருகின்றது. தற்சார்பு அறிவுசார் சொத்துரிமையுடைய வாகனத் தொழிற்துறையின் வளர்ச்சிக்கு அது முக்கியத்துவம் அளித்துள்ளது. இதில் மத்திய சீனாவின் அன்ஹுவெய் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. சீனாவின் சிறு பார வண்டி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் JIANG HUAI வாகன நிறுவனமும் கார் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் QI RUI வாகன நிறுவனமும் அன்ஹுவெய் மாநிலத்திலே அமைந்துள்ளன.
இதோ, அன்ஹுவெய் மாநிலத்து JIANG HUAI வாகனப் பங்கு முதலீட்டு நிறுவனத்தின் வாகனப் பொருத்தல் பணிப்பட்டறை. சுமார்
500 மீட்டர் நீளமுடைய உற்பத்தி நெறியில் வாகனத்தின் அடிச்சட்டம், வாகனத்தின் உடற்பகுதி, விசைப்பொறி உள்ளிட்ட உதிரிப் பாகங்கள் அடுத்தடுத்து பொருத்தப்பட்டு இறுதியில் உற்பத்தி நெறியின் கடைசி முனையிலிருந்து வாகனங்கள், ஆலைக்கு வெளியே செல்லுகின்றன. JIANG HUAI வாகனப் பங்கு முதலீட்டு நிறுவனம் 1999ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பார வண்டி , வணிகப் பயன்பாட்டு வண்டி ஆகியவற்றின் உற்பத்தி இவ்வாலையில் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது, இவ்வாகனங்கள் சீனச் சந்தையில் விற்கப்படுவது தவிர, தென் கிழக்காசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய பிரதேசங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அன்றி, JIANG HUAI நிறுவனம், வெளிநாடுகளில் ஆய்வு மையத்தையும் நிறுவியுள்ளது.
1 2 3 4
|