தற்சார்பு அறிவுசார் சொத்துரிமைக்கான நெடுநோக்குத் திட்டத்தில் ஊன்றிநிற்பது என்பது இந்நிறுவனம் சிறந்த வெற்றியை ஈட்டியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று இந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் JIN GE BO கூறினார். அவர் தற்சார்பு, புத்தாக்கம் ஆகியவற்றின் காரணமாக, சொந்த பொருட்களை வளர்ச்சியுறச் செய்வதில் QI RUIவுக்கு ஆற்றல் உண்டு. எங்களுடைய 8 ரக வாகனங்கள் சந்தையில் விற்பனையாகின்றன. இவ்வாண்டு மேலும் 6 புதிய ரக வாகனங்கள் சந்தையில் விற்கப்படும். சீனாவின் வாகன வகைகளில் மிக கூடுதலான எண்ணிக்கை கொண்ட தொழில் நிறுவனங்களில் ஒன்றாக QI RUI விரைவில் மாறிவிடும். இவ்வளவு அதிகமான வகைகள் இருப்பதால், பல்வேறு சிறப்புச் சந்தைகளில் வாகனங்களை QI RUI விற்பனை செய்து, சந்தையில் மேலும் அதிகமான வீதப் பங்கைப் பெறலாம். இவையனைத்தும், தற்சார்பு மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் பெறப்பட்டன என்றார் அவர். தற்சார்பு, அறிவுசார் சொத்துரிமை கொண்ட வாகனங்களை வளர்ச்சியுறச் செய்வதில் JIANG HUAI, QI RUI உள்ளிட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவியளிக்கும் பொருட்டு, அன்ஹுவெய் மாநிலத்தின் பல்வேறு நிலை அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. வாகனங்களின் உதிரிப் பாகத் தொழிலின் வளர்ச்சியை மேம்படுத்தி, வாகனத் தயாரிப்புத் தொழில் நிறுவனத்தின் பிற்சேவைப் பிரச்சினையைத் தீர்ப்பது என்பது இந்நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளது. QI RUI வாகனத் தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள அன்ஹுவெய் வூஹு வளர்ச்சி மண்டலத்தின் மேலாண்மைக் கமிட்டியின் அதிகாரி WANG QING பேசுகையில், QI RUI நிறுவனத்தின் தேவைக்கிணங்க, வாகனங்களின் உதிரிப் பாகத் தொழிலின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உதிரிப்பாக விநியோக வணிகர்கள் பலர், வளர்ச்சி மண்டலத்தில் நுழைந்துள்ளனர் என்று கூறினார்.
1 2 3 4
|