எங்கள் மண்டலத்தில் நுழைந்த வாகன உதிரிப் பாகத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, அரசு நிலை வளர்ச்சி மண்டலத்தின் கொள்கைக்கிணங்க செயல்படுகிறோம். QI RUI வாகன உற்பத்தி அளவு அதிகரிப்பதுடன், உதிரிப்பாகத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமாய் உள்ளது. ஆகவே, எங்கள் மண்டலத்தில் ஒரு சிறந்த சேவைச் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஒரே இடத்தில் சேவை புரிவதாக வாக்குறுதியளித்துள்ளோம். அதாவது, இங்கு விண்ணப்பிக்க வரும் தொழில் நிறுவனங்கள் இவ்விடத்திலேயே ஒழுங்கு முறையை முடித்துக்கொள்ளலாம். அத்துடன், தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் போக்கில் முழுமையான சேவையும் வழங்கப்படும் என்றார் அவர்.
அன்ஹுவெய் மாநிலத்தின் வணிக அலுவலகத்தின் துணைத் தலைவர் சாங்ச்சியென் எமது செய்தியாளரிடம் பேசுகையில், சுயசார்பு அறிவுசார் சொத்துரிமையைக் கடைப்பிடிப்பதோடு, வெளிநாடுகளுடன் தொழில் நுட்ப ஒத்துழைப்பு மேற்கொள்ளுமாறு வாகனத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களுக்கு அன்ஹுவெய் மாநில அரசு ஊக்கமளிக்கின்றது என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
தற்சார்புடைய வணிகச் சின்னம் என்பது, வெளிப்புறத்துக்குத் திறந்துவிடாமல் கதவு மூடியபடி வளர்வது என்று பொருட்படவில்லை. அது வெளி புறத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை அது வரவேற்கிறது. சில வாகன வடிவ ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வணிகர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தகவல் துறையில் தொழில் நிறுவனங்களுக்கு வணிக அலுவலகம் மேலும் செவ்வனே சேவை புரியும் என்றார் அவர்.
1 2 3 4
|