• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-09 16:09:39    
வேகமாக வளரும் வாகனத் தொழிற்துறை

cri

வாகன வடிவமைப்புக்கு அது அங்குள்ள வல்லுநர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்நிறுவனத்தின் அதிகாரி வாங்துங் கூறியதாவது, உலகில் எங்களுக்குரிய ஆய்வு மையம் இல்லை. வெளிநாட்டு ஆய்வு மையம் மூலம், உலகின் முன்னேறிய தொழில் நுட்பத்தைப் பெற்று, வல்லநர்களைப் பணிக்கு அமர்த்தி, அங்கே ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை நாடுகிறோம். இத்தாலியிலுள்ள எங்களுடைய ஆய்வு மையத்தில் அந்நாட்டின் ஆய்வுக் குழுவுறுப்பினர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளோம். நாங்கள் உற்பத்தி செய்யவுள்ள அடுத்த ரக காரின் முக்கிய வடிவமைப்பு, இத்தாலி வடிவமைப்பு மையத்தால் நிறைவேற்றப்படும் என்றார் அவர். அன்ஹுவெய் மாநிலத்தில் தற்சார்பு அறிவுசார் சொத்துரிமை கொண்ட மற்றொரு சீன வாகனத் தொழில் நிறுவனம், QI RUI வாகன நிறுவனம் ஆகும்.

கடந்த ஆண்டில் அதன் வாகன உற்பத்தி அளவு 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அவை உலகின் 50க்கு அதிகமான நாடுகளிலும் பிரதேசங்களிலும் விற்பனையாகின்றன. ஏற்றுமதியில் அது நாட்டின் முதல் இடம் வகிக்கின்றது. வாகனத் தயாரிப்பில் மிகவும் முக்கிய துறையான விசைப்பொறி ஆராய்ச்சியில் பெரும் முன்னேற்றம் அடைந்ததைக் கண்டு இந்நிறுவனத்தின் பணியாளர்கள் பெருமையடைகின்றனர்.

1 2 3 4