கலை......நேயர்களே வணக்கம். இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். தமிழன்பன்......கலை அக்டோபர் 21ம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. கலை.....ஆமாம். மாநாடு நடைபெற்ற போது மொத்தம் 10 நேயர்கள் நேருக்கு நேர், நேயர் நேரம் மற்றும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சிகளில் பொதுச் செயலாளர் ஹுச்சிந்தாவ் மாநாட்டில் அளித்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்து நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர்.
தமிழன்பன்.......ஆமாம். அதை கவனித்தேன். உண்மையில் மேலும் கூடுதலான நேயர்கள் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வேண்டும் என்ற தகவலையும் நீங்கள் சொன்னீர்கள். கலை......ஆமாம். பல நேயர்கள் இதில் கலந்து கொள்ள முடியாதமைக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்தனர். தமிழன்பன்.......அடுத்த முறை வாய்ப்பு இருந்தால் அவர்களின் ஆர்வத்தை கட்டாயம் நிறைவேற்றுவோம். ..............இசை................. தமிழன்பன்.......கலை இன்றைய நிகழ்ச்சியில் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஜனநாயகம் பற்றி கொஞ்சம் விபரமாக விளக்கி கூறலாமே. கலை...... நல்ல யோசனை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாடு நடைபெற்ற போது நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அமைப்புத் துறையின் துணைத் தலைவர் ஓ யா சுன் பேசுகையில் ஜனநாயகம் தொடர்பான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மனப்பான்மையை தெரிவித்தார்.
1 2 3 4
|