தமிழன்பன்.......அவ்விரண்டு நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறுங்கள். கலை.......மகிழ்ச்சி. ஒன்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டு அமைப்பு முறையை முழுமையாக்குவது. இன்னொன்று தேசிய மாநாட்டுப் பிரதிநிதிகளின் பதவிகால அமைப்பு முறையை நடைமுறைப்படுத்துவது. கட்சிக்குள்ளே தேர்தல் அமைப்பு முறை சீர்திருத்தப்படுகிறது. வேட்பாளர்களை பரிந்துரை செய்யும் அமைப்பு முறையும் வாக்களிப்பு முறையும் திருத்தம் பெறுகின்றது. இது அடிமட்ட கட்சி அமைப்புகளின் தலைமை பீடத்தை நேரடியாக தேர்ந்தெடுக்கும் அளவு படிப்படியாக விரிவாக்கப்பட உள்ளது. தமிழன்பன்.........பொதுவாக கூறினீர்கள். இன்னும் விபரமாக கூறலாமா? கலை........முயற்சிகிறேன். 2002ம் ஆண்டு முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 300 வட்டங்களில் சோதணை முறையில் கட்சி அமைப்பின் தலைமை பீடத்தை நேரடி தேர்வு செய்தது. தலைமை பீடத்தின் உறுப்பினர்களை பரிந்துரை செய்வதில் நிறுவனம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பரிந்துரை செய்வதை ஒன்றிணைத்து, வெளிப்படையாக பரிந்துரை செய்வதன் மூலம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழன்பன்.........உங்கள் விளக்கத்தை கேட்ட பின்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்வு முறை அறிந்து கொண்டுள்ளேன். இவ்வாண்டு முதல் கட்சி சாரா பிரமுகர்கள் இருவர் தனித்தனியாக சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சராகவும் சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமான கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றி எப்படி புரிந்து கொள்வது? கலை........நீங்கள் கேட்ட கேள்வி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஒத்ததாகும். இதற்கு பதிலாக துணைத் தலைவர் ஓ யான் சுன் தெரிவித்த கருத்தை கேளுங்கள். தமிழன்பன்.........கட்சி சாரா பிரமுகர்களை நியமிப்பது தொடர்பாக எதிர்காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அமைப்புத் துறை தொடர்ந்து இந்த பணியை நுணுக்கமாக நிறைவேற்றும். பணிகளின் தேவைக்கு இணங்க, ஊழியர்களை தேர்வு செய்வதன் விதிகளுக்கு ஏற்ற கட்சி சாரா ஊழியர்களை தொடர்புடைய தலைமை பீடத்திற்கு அது நியமிக்கும் என்று ஓயான்சுன் தெரிவித்தார்.
1 2 3 4
|