தமிழன்பன்.......அப்படியா. அவர் என்ன கூறினார்? கலை......சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் உருவாக்கத்தில் முதல் முறையாக கட்சியின் உள்ளேயான ஜனநாயகத்தில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது. தகுந்த முறையில் ஆக்கப்பூர்வமாகவும் பயன் தரும் முறையிலும் இந்த ஜனநாயகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றியுள்ளது. தமிழன்பன்........ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹுசிந்தாவ் அவர்களுடைய குரலில் கருத்து கேட்பது இன்னும் நல்லது. கலை.......கேட்கலாமே. இது பற்றிய அவருடைய குரலை கேளுங்கள். தமிழன்பன்..........கட்சிக் கமிட்டியினுள்ளே விடயங்கள் பற்றி விவாதிக்கும் விதிமுறைகள் மற்றும் கொள்கை தீர்மானங்கள் மேலும் முழுமையாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொள்கை தீர்மானத்தின் அறிவியல் பூர்வ தன்மையும் ஜனநாயக மயமாக்கமும் விரைவுபடுத்தப்பட்டுகின்றன. கட்சியினுள்ளே ஜனநாயகம் நடைமுறைபடுத்தப்படும் பல்வகை வடிவங்கள் ஆராய்ந்து விரிவாக்கப்பட்டுளளன.
இந்த ஜனநாயகம் மூலம் மக்களின் ஜனநாயகத்திற்கு வழிகாட்டி தலைமை தாங்கும் பயனாக முழுமையாக வெளிகொணரப்பட்டுள்ளது. கட்சியிலுள்ள ஜனநாயகமும் மக்களிடை ஜனநாயகமும் ஒன்றை ஒன்று முன்னேற்றி கூட்டாக வளரும் சீரான நிலைமை உருவாகியுள்ளது. கலை.......இதை கேட்டும் போது துணைத் தலைவர் ஓயாசுன் தெரிவித்த கருத்து மிக தெளிவானதாகும். தமிழன்பன்........ஜனநாயகத்தை விரைவுப்படுத்துவது பற்றி பொதுச் செயலாளர் ஹுச்சிந்தாவ் எவ்வித நடவடிக்கைகளை முன்வைத்துள்ளார்? கலை........15ம் நாள் துவங்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாட்டில் ஹுச்சிந்தாவ் அடுத்த ஐந்தாண்டுகளில் கட்சியினுள்ளே ஜனநாயகத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் பலவற்றை முன்வைத்தார். அவற்றில் முக்கியமானவை இரண்டாகும்.
1 2 3 4
|