கலை........சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த பின், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆக்கப்பூர்வமாகவும் நிதான முறையிலும் அரசியல் அமைப்பு முறையின் சீர்த்திருத்தத்தை விரைவுபடுத்தியுள்ளது. தமிழன்பன்.......இம்முயற்சியில் சோஷலிச ஜனநாயக அரசியல் மேலும் துடிப்பான உயிராற்றலை காட்டியுள்ளது. கலை.......அரசியல் அமைப்பு முறையிலான சீர்திருத்தம் சீனாவின் சீர்த்திருத்த வளர்ச்சியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இதுபற்றியும் ஓயான்சுன் விளக்கி கூறினார்.
தமிழன்பன்........சீனாவின் சீர்த்திருத்தம் பன்முகங்களில் உள்ளது. பொருளாதார அமைப்பு முறை மட்டுமல்ல அரசியல் அமைப்பு முறை சீர்திருத்தமும் இதில் சேர்க்கப்படுகின்றது. உற்சாகத்துடன் நிதானமாக அரசியல் அமைப்பு முறைச் சீர்த்திருத்தை முன்னேற்றுவது, சோஷ்லிச ஜனநாயக அரசியலை வளர்ப்பது, சோஷலிச அரசியல் நாகரிகத்தை நிறுவுவது என்பன சீனாவின் சீர்த்திருத்த வளர்சசியில் முக்கிய கடமைகளாகும். கலை........ஆகவே அரசியல் அமைப்பின் சீர்திருத்தத்தை தொடர்ந்து முன்னேற்றுவது சீன மக்கள் ஜனநாயக உரிமையை முழுமையாக பயன்படுத்துவதற்கு வலுவான உத்தரவாதம் அளித்துள்ளது. தமிழன்பன்.......இதன் மூலம் ஜனநாயக ஒற்றுமை, உயிராற்றல் நிறைந்த விறுவிறுப்பு, அமைதி, இணக்கம் ஆகியவை நிறைந்த அரசியல் சூழ்நிலை சீனாவில் உருவாக உள்ளது.
1 2 3 4
|