• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-04 17:22:42    
திபெத்தின் தொழில் கல்வி துறை

cri

ராஜா.....நான் சீனா வந்து சீன வானொலி தமிழ்ப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்து கிட்டத்தட்ட 10 மாசமாகிவிட்டது. சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கல்வி பற்றி சில தகவல்களை கேட்டறிந்தேன்.
கலை.....நீங்கள் அறிந்த தகவலை நேயர்களுக்கு விளக்கி கூறலாமா?
ராஜா.....கண்டிப்பாக. திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் புதுமுறைக் கல்வி தாமதமாக தொடங்கிய போதிலும் அதன் வளர்ச்சி விரைவாக இருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் துவக்க பள்ளி முதல் இடைநிலை பள்ளிப்டிப்பு வரை 9 ஆண்டு காலக் கட்டாயக் கல்வி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வேலை வாய்ப்பு பெறும் நோக்கத்துடன் தொழில் கல்வியை திபெத் தன்னாட்சி பிரதேச அரசு ஆக்கப்பூர்வமாக வளர்த்துள்ளது. அப்படிதானே.


கலை......ஆமாம். தொழில் கல்வி திபெத் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. திபெதின் சான்நான் குங்கா மாவட்டத்தின் ஜெத்தெசியு நகரில் வாழ்கின்ற 18 வயதான திபெத் இன இளம் பெண் பிக்காச்சோக்காவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டாக சொல்லலாம். வாரத்தில் திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரையான காலை எட்டரை மணிக்கு அவர் தம் ஊருக்கு அருகில் உள்ள ஜெத்தெசியூ இடுப்பு துணி தொழிற்சாலை சென்று அங்குள்ள 20க்கும் அதிகமான தொழிலாளர்களுடன் இணைந்து சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியுடனும் வேலை செய்கிறார். ஜெத்தெசியு நகரில் இடுப்புத் துணி பின்னும் உற்பத்திக்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அங்கே இது குடும்பத் தொழிலாக நடைபெறுகின்றது.
ராஜா.......கைவினை நுட்பம் தெரிந்த முதியோர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் சொக்கா போன்ற இடை நிலை பள்ளி கல்வி பெற்ற இளைஞர்கள் மிகக் குறைவு என்று நான் கேட்டறிந்தேன். ஏன் சொக்கா போன்ற இளைஞர்கள் மக்களால் வரவேற்கப்படுகின்றனர்?

1 2 3 4