கலை........ தொழிற் கல்வி மூலம் தான் பாரம்பரிய கைவினை நுட்பத்தை சொக்கா கற்றார். இது பற்றி அவர் கூறியதாவது இடைநிலைப் பள்ளியில் 3வது வகுப்பில் பயின்ற போது தொழில் கல்வி கற்க நான் விரும்பினேன். என் சக மாணவர்களில் 50 விழுக்காட்டினர் என்னை போல தொழிற் கல்வி பெற தீர்மானித்தனர். பள்ளியில் நான் இடுப்புத் துணி பின்னும் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டேன். படிப்பை முடித்துக் கொண்டதும் எனக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. தொழில் நுட்பம் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கின்றது என்றார் அவர்.

ராஜா......சொக்கா போல தொழில் நுட்பம் கொண்ட மாணவர்கள் மென்மேலும் அதிகமாக சமூகத்தில் வேலை செய்கின்றனர். பெரும்பாலானோர் கைவினைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். நாற்காலி சாய்புத் துணி, புத்த ஓவியம் தீட்டுவது போன்ற திபெத் தேசிய தனிச்சிறப்பு மிக்க பாரம்பரியக் கைவினைத் தொழில்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். திபெத் இனத்தின் பண்பாட்டை வளர்ப்பதில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கெடுக்கின்றனர். கலை.......நீங்கள் சொன்னது சரிதான். ஆனால் இதை நான் எப்படி நம்புவது? இது பற்றி உதாரணம் எடுத்து காட்டலாமா?
1 2 3 4
|