• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-04 17:22:42    
திபெத்தின் தொழில் கல்வி துறை

cri

ராஜா......நான் சொன்னது என் சொந்த கருத்து அல்ல. சானான் கல்வி மற்றும் விளையாட்டு ஆணையத்தின் அதிகாரி டாவாவின் கூற்றை எடுத்து கூறுகின்றேன்.
தொழிற் கல்வி பெற்ற மாணவர்கள் கைவினை நுட்பத்தை கற்றுக் கொண்ட பின் தொடர்ந்து இதைப் புதுப்பித்து வருகின்றனர். முந்திய தொழில் நுட்ப நிபுணர்களிடம் கல்வியளிப்பு இல்லை. அவர்களுக்கு செய்வது மட்டும் தெரிந்திருந்தது. இப்போதைய மாணவர்கள் விகிதாசாரம், அழகு, வண்ணத்தைக் கலப்பது போன்ற நுட்பங்களை ஆராய்ந்து மேலும் அருமையான கைவினைப் பொருட்களை தயாராக்கின்றனர் என்றார் அவர்.


கலை.......டாவா மேலும் அம்மாவட்டத்தின் தொழிற் கல்வி பற்றி விளக்கி கூறுகின்றார். சானான் மாவட்டத்தில் ஒவ்வொரு இடைநிலைப் பள்ளியிலும் 3வது வகுப்பில் சேர்ந்த பின் மாணவர்கள் மேலும் தொழிற் கல்வியை கற்க வேண்டும். அடிப்படைக் கல்வியில் தொழிற் கல்வி முக்கிய இடம் பெறுகின்றது. 1993ம் ஆண்டு முதல் இதுவரை சாநான் மாவட்டத்தில் உள்ள தொழிற் பள்ளிகளில் பின்னல் நுட்பத்தைப் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 500 தாண்டியது.
ராஜா.....பின்னல் தொழில் நுட்பம் மட்டுமல்ல பாரம்பரிய ஓவியம் தீட்டுவதிலும் பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் 300க்கும் மேலாகும். திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாசா நகரில் புகழ் பெற்ற தரை விரிப்புத் துணி தயாரிப்பு தொழிற்சாலையில் சுமார் 80 தொழிலாளர்கள் சாநான் மாவட்டத்தின் பல்வேறு தொழில் இடைநிலைப் பள்ளிகளில் படித்துப் பட்டம் பெற்றவர்கள்.

1 2 3 4