• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-04 17:22:42    
திபெத்தின் தொழில் கல்வி துறை

cri

கலை.......இந்த தகவலை கேட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். தொழிற் கல்வி பரவுவதன் மூலம் திபெத்தின் கைவினைத் தொழில் நுட்பம் தலைமுறை தலைமுறையாக நிலைநிறுத்தப்படலாம் என்று நம்புகின்றேன்.
ராஜா......ஆமாம். திபெத் இன மக்கள் புதிய வீட்டை கட்டும் போது வீட்டின் உள்ளேயும் வெளியேயும் வண்ணத்துடன் ஓவியம் தீட்டி அழகுபடுத்த வேண்டும். ஆகவே பாரம்பரிய ஓவிய வகுப்பில் படிப்பை முடித்த மாணவர்கள் மக்களால் மிகவும் வரவேற்கப்படுகின்றனர். அவர்களில் சிலர் நிறுவனத்தை நிறுவி மக்களுக்கு சேவை புரிந்து அதிலிருந்து பொருளாதார நன்மை பெற்றுள்ளனர்.
கலை......அவர்களுக்கு நன்மை தருவது மட்டுமல்ல திபெத் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் நன்மை தர முடியும் என்று நான் நம்புகின்றேன்.
ராஜா......உங்கள் நம்பிக்கையில் ஐயம் எதுவும் இல்லை. திபெத்தின் மற்ற மாவட்டங்களிலும் சானான் மாவட்டத்தை போல தொழிற் கல்வி விறுவிறுப்பாக நடத்தப்படுகின்றது. வட்டார தனிச்சிறப்பையும் பண்பாட்டு மேம்பாட்டையும் அந்த மாவட்டங்கள் பெரிதும் வெளிக் கொணர்ந்துள்ளன.
கலை......இது பற்றி நீங்கள் உதாரணம் கூறலாமா?


ராஜா.....கண்டிப்பாக, சியு ஸவேய் மாவட்டம் தானியம் விளையும் மாவட்டமாகும். அங்கு வேளான் இயந்திரங்களை அடிக்கடி பழுதுபார்க்க வேண்டுயுள்ளது. பல மாணவர்கள் டராக்டர் பழுதுபார்க்கும் தொழில் நுட்பத்தை இடை நிலை பள்ளியில் கற்று கொள்கின்றார்கள். பைரான் மாவட்டத்தில் 80க்கும் அதிகமான இடைநிலைப் பள்ளி மாணவர்கள் வெப்ப அறையில் தர்பூசணிப் பழம் பயிரிடும் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்கின்றனர். திபெத் பாணியுடைய கணப்பு அடுப்பு உற்பத்தி செய்யும் தாஞ்சுன் மாவட்டத்தில் பல்வேறு தொழில் பள்ளிகளில் இது பற்றிய கல்வி பாடம் நடத்தப்படுகின்றது.
கலை.......நீங்கள் சொன்னது தவிர, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கல்வி ஆணையத்தின் தொழிற் கல்வி பகுதித் தலைவர் தென் குவாங் சினின் கருத்தை கவனிக்க வேண்டும்.
ராஜா...... அவர் கூறியதாவது

2004ம் ஆண்டு முதல் திபெத் கல்வி ஆணையகம் தொழிற் கல்வி வளர்ப்பதை கல்வித் திட்டத்தில் சேர்த்துள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. கடந்த ஆண்டில் இதற்கு 1 கோடி யுவான் ஒதுக்கி தொழிற் பயிற்சி வகுப்பு நடத்தியுள்ளது. இவ்வாண்டில் இதற்கான முதலீடு 1 கோடியே 50 லட்சம் யுவானை தாண்டியது. திபெத்தின் இடை நிலைத் தொழிற் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை. பள்ளி சூழலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசும் உள்ளூர் அரசும் 24 கோடி யுவானை சிறப்பு நிதித் தொகையாக ஒதுக்கி ஆண்டுக்கு 25 ஆயிரம் மாணவர்களை சேர்க்கும்.


1 2 3 4