2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நன்றாக நடத்துவதற்காக, அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் என்ற கருத்தை பெய்ஜிங் அமைப்புக்கமிட்டி முன்வைத்தது. முன்னேறிய அறிவியல் தொழில் நுட்ப வழிமுறை மூலம் ஒலிம்பிக் செய்திகளை அறிவித்து, பெய்ஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றி உலகிற்கு சிறப்பாக காண்பிப்பது இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். செய்தி ஊடக அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய 3வது கருத்தரங்கு அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. அறிவியல் தொழில் நுட்ப வழிமுறையில் ஒலிம்பிக் விளையாட்டுகள் பற்றிய செய்தியை அறிவிப்பதை ஆதரிப்பது பற்றி, கருத்தரங்கில் கலந்த கொண்ட சீனச் செய்தி ஊடகங்களின் பிரதிநிதிகளும் செய்தித் தொடர்பு தொழில் நுட்பத் துறையிலான நிபுணர்களும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் விவாதித்தனர்.

விவாதம் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய செய்தி அறிக்கை குறித்த தொழில் நுட்ப ஆயத்தப் பணியை கருத்தரங்கில் கலந்து கொண்டடோர்களுக்கு அறிமுகப்படுத்துவது இந்தக் கருத்தரங்கின் நோக்கமாகும். எண்ம மற்றும் இணையத் தள மயமாக்கம் பற்றிய தொழில் நுட்பத் திட்டத்தை வகுத்து, இணையம், செல்லிட செய்தித் தொடர்பு முதலிய துறைகளிலான பக்குவம் அடைந்த முன்னேறிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான செய்தி அறிவித்தலுக்கு ஆயத்தம் செய்ய வேண்டும் என்று கூட்டம் விருப்பம் தெரிவித்தது. சீனத் தேசிய செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிறுவனத்தின் துணை இயக்குநர் lu wei கூட்டத்தில் கூறியதாவது.
1 2 3 4
|