அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் என்பது ஒரு அடிப்படையாகும். அறிவியல் தொழில் நுட்பம் என்பது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான உத்தரவாதமும் ஆதரமும் ஆகும். தரமான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமானால், உயர் அறிவியல் தொழில் நுட்பம் தேவைப்படுகின்றது. அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இல்லாதிருந்தால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றைய அளவையும் செல்வாக்கையும் கொண்டிருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றார் அவர்.

2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் செய்தி ஊடகங்களுக்கு தலைச்சிறந்த புதிய தொழில் நுட்பச் சேவையை பெய்ஜிங் அமைப்புக் கமிட்டி வழங்கும். வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, செய்தித் தொடர்புச் சேவையில், மிக முன்னேறிய 3G செய்தித் தொடர்பு தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். தவிரவும், பன்நோக்கு தொலைத் தொடர்பு வாகனம் உள்ளிட்ட சில புதிய வசதிகள் பயன்பாட்டுக்கு வரும். இந்த வாகனத்தில், கம்பி மற்றும் கம்பி இல்லா தொலைத் தொடர்பு, பன்நோக்கு தொலைத் தொடர்பு, நிழற்பட ஊடனுப்பி, கம்பி இல்லா நிழற்பட அனுப்பீடு, நுண்ணலை பட அனுப்பீடு, முதலிய வசதிகள் இந்த வாகனத்தில் பொருத்தப்படுகின்றன. இந்த வாகனம் ஆணைய மையமாக பங்காற்றும். தவிர, ஒரு ஒலி, ஒளி மற்றும் திரைப்பட பணியகத்தால் ஆராய்ந்து தயாரித்த CMMB என்னும் செல்லிட பல்லூடகமும் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும். இந்த CMMB தொகுதி, செல்லிடபேசி, மடிக்கணினி உள்ளிட்ட பல வசதிகள் கொண்டது. செயற்கை சின்னங்களைப் பயன்படுத்தி, நாடு முழுவதிலும் 25 தொலைகாட்சி ஒளிபரப்புகள், 30 வானொலி ஒலிபரப்புகள் ஆகியவற்றை இது ஆதரிக்கும். தற்போது, பெய்ஜிங் மாநகரில் CMMB சோதனை வலைபின்னலில் பயன்படுத்தப்படத் துவங்கியுள்ளது. 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறு போது, இது, பெய்ஜிங், ஷாங்காய், தியேன் சின், சென் யாங் முதலிய 5 நகரங்களில் சேவை புரியும்.
1 2 3 4
|