• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-15 15:07:20    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய செய்தி அறிவிப்புப் பணியில் பங்கு ஆற்றும் அறிவியல் தொழில் நுட்பம்

cri

2008ம் ஆண்டு ஒலிம்பி விளையாட்டு போட்டியில், அகன்ற அலைவரிசை இணையம் சேவையின் பயன்பாடு மற்றொரு தனிச்சிறப்பாகும். உயர் வேகத்தை நிலைநிறுத்தும் அதேவேளையில், பாதுகாப்பு சேவையையும் இது வழங்கும். இந்தப் பொறுப்பை ஏற்கும் சீன Netcom நிறுவனத்தைச் சேர்ந்த சாங் லிங் கூறியதாவது


தொலைக்காட்சி நிலையங்களுக்கும், செய்தி ஏடுகளுக்கும் வேறுபட்ட சேவை வழங்குவோம். ஒளி இழை மூலம் மிகத் தெளிவான படங்களைத் தொலைக்காட்சி நிலையங்களுக்கு அனுப்புகின்றோம். தற்போது, இணையதளத்தில் இரட்டை வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அகன்ற அலைவரிசையின் IP இணையம், அகன்ற அலைவரிசையின் சிறப்பு வலைப்பின்னல்கள், இணையத்தை நேரடியாகப் பயன்படுத்தும் வசதி ஆகிய 3 வகை சேவைகளை செய்தி ஏடுகளுக்கு வழங்குகின்றோம். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான சிறப்பு இணையத்தின் வேகம் 150 MBயை அடையும். இதன் மூலம், செய்தியாளர்கள் தகவல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். ஒலிம்பி விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, செய்தி ஊடகங்களுக்கு இவை மிகவும் நம்பகமான பாதுகாப்பான சேவையை அளிக்கலாம் என்றார் அவர்.
தவிர, 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை வரவேற்கும் வகையில், உயர் வேக கம்பியில்லா இணைய கட்டுமானம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 2008ம் ஆண்டு ஹுன் திங்களுக்கு முன், பெய்ஜிங்கில் 275 சதுர கிலோமீட்டர் நிலபரப்பில் 9000 கம்பியில்லா இணைய தொடர்புகளும், 150 கம்பி இல்லா அகன்ற அலைவரிசை சேவை தளங்களும் கட்டியமைக்கப்படும். பெய்ஜிங்கின் 90 விழுக்காட்டு முக்கிய சாலைகளில் இவை பரவியிருக்கும்.
1 2 3 4