சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள SHEN ZHEN நகரில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Jeff என்பவர், 7 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அங்கே, குழந்தைகளின் ஆங்கில மொழி ஆசிரியராக இருந்து, பின் புகழ்பெற்ற செய்தியேட்டின் மூத்த பதிப்பாசிரியராக அவர் மாறியுள்ளார். இந்த 7 ஆண்டுகளில், அவர் தன்னை தானே மேம்படுத்திய அதே வேளை, SHEN ZHEN நகரின் விரைவான வளர்ச்சியையும் நேரில் கண்டுள்ளார். 60 வயது நெருங்கிய Jeff, பார்ப்பதற்கு தனது வயதை விட இளமையாக காணப்படுகிறார். 7 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவில் தன்னுடன் பழகிய சீன நண்பர்களின் மூலம், சீனா பற்றி அவர் அறிந்து கொண்டார். இந்த நண்பர்களின் பரிந்துரை மற்றும் ஊக்கம், SHEN ZHEN நகரில் வேலை செய்ய அவர் தெரிவு செய்ததற்கு காரணமாகும்.

SHEN ZHEN சென்றடைந்த Jeffக்கு, என்ன வேலை செய்வது என தொடக்கத்தில் தெரியவில்லை. ஆனால், ஆங்கில மொழி கற்றுக் கொடுக்கும் சந்தைக்கு பரந்த எதிர்காலம் உண்டு என்பதை கண்டதும், துவக்கப் பள்ளி ஒன்றில் ஆங்கில மொழி ஆசிரியராக வேலை செய்யத் துவங்கினார். இந்த வேலையை Jeff அடிக்கடி நினைவு கொள்கிறார். அவர் கூறியதாவது— "குழந்தைகளை மிகவும் விரும்புகின்றேன். அவர்களுடன் பழகிய போது, சீனா பற்றிய முக்கிய அம்சங்களையும் சீனப் பண்பாட்டையும் உண்மையில் அதிகமாக அறிந்து கொண்டேன். சில குழந்தைகளின் ஆங்கில மொழி தரம் நன்றாக உள்ளது. அவர்களது பெற்றோரின் ஆங்கில மொழி தரம் பரவாயில்லை. சில சமயம் நாங்கள் கூட்டாக இரவு உணவு சாப்பிடுகின்றோம். குளிர்ந்த தேனீர் கூட்டாக குடிப்பதுண்டு. இதிலிருந்து நான் பெரும் பயன் பெற்றுள்ளேன்" என்றார் அவர்.
1 2 3 4
|