• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-16 10:43:55    
SHEN ZHEN நகரிலுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Jeff என்பவர்

cri


ஆசிரியராக வேலை செய்வது எளிதானதல்ல. ஆனால், குழந்தைகள் உடனே அமைதியாக இருக்கச் செய்யவதற்கு, Jeff எப்போதும் வழி கண்டுள்ளார். குழந்தைகளை தனது நண்பர்களாக அவர் பார்க்கிறார். இந்தக் குழந்தைகள் அவரை மிகவும் விரும்புகின்றனர்.
இப்படி தான், குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் மகிழ்ச்சியை அனுபவித்ததோடு, சீனா பற்றி இந்தக் குழந்தைகள் தனக்கு கொண்டு வந்த தோற்றத்தையும் அவர் உணர்ந்தார். இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக அவர் வேலை செய்தார். அவ்விரண்டு ஆண்டுக்காலம் தனது வாழ்வில் மிக அருமையான நினைவுகளைக் கொண்ட காலமாக அவர் கூறினார்.
சில காரணங்களால், வேலை மாற்றுவதென Jeff முடிவு செய்தார். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை என்பதால், அவரைப் பொறுத்த வரை சொந்தமாக பயன்படுத்தக் கூடிய நேரம் அதிகமாகியது. விரைவில், தனக்கு அருமையான நினைவுகளைக் கொண்டு வந்த இந்நகரில் Jeff சீன மங்கை ஒருவருடன் காதலில் மூழ்கினார்.
மதுவகத்தில் மது குடிக்க Jeff விரும்புகிறார். SHEN ZHENனிலுள்ள மதுவக வீதி, ஓய்வு நேரத்தில் அவர் செல்ல விரும்பும் முதல் இடமாகும். அங்கேதான், தான் உளமார விரும்பும் மங்கை LU XI YINGகை அவர் சந்தித்தார்.
சீனாவின் தென் மேற்கு பகுதியிலிருந்து வந்த ச்சுவாங் இன மங்கை LU XI YING, Jeff அடிக்கடி செல்லும் மதுவகத்தில் சேவை பணியாளராக வேலை செய்கிறார். கீழை நாட்டு பெண்மணியின் நற்பண்பு மற்றும் பாரம்பரியத் தன்மை வாய்ந்த குணம், Jeffஐ பொறுத்த வரை ஈர்ப்பு ஆற்றல் மிக்கவை.

1 2 3 4