SHEN ZHEN நகரிலுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Jeff என்பவர்
cri
அப்போது, சீன மொழியில் Jeff அவ்வளவு நன்றாக பேச முடியவில்லை. LU XI YINGகிற்கு ஆங்கில மொழி புரியாது. மொழித் தடை, Jeffஇன் கண் முன் ஏற்பட்ட மிகப் பெரிய சிக்கலாகும். ஆனால், புத்திகூர்மைமிக்க Jeff வழி கண்டார். மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அவர் கண்டுபிடித்தார்.  "SHEN ZHEN நகரில் எனக்கு நண்பர் ஒருவர் இருக்கிறார். முக்கிய ஏதாவது பேச விரும்பும் போது, தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொண்டு, என்ன சொல்ல வேண்டும் என அவரிடம் கூறுவேன். பின்னர் தொலைபேசியை என் மனைவியின் தந்தையாரிடம் தருவேன். இத்தகைய வழிமுறையில் என் கருத்திலான முக்கிய செய்தியை உரியவரிடம் வெளிப்படுத்துகின்றேன்" என்றார் Jeff. இந்த முறை பயன்மிக்கது. அவரது காதலை நாடும் திட்டம் இதன் மூலம் தடையின்றி நடந்தது. LU XI YINGகின் பெற்றோரின் புரிந்துணர்வையும் அவர் பெற்றுள்ளார். அவர்கள் இருவரும் திருமணம் முடித்து குடும்பத்தை உருவாக்கினர். தற்போது Jeffஇன் சீன மொழி பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. LU XI YINGகும் ஆங்கில மொழியில் கொஞ்சம் பேசலாம். பண்பாட்டு வித்தியாசம் மற்றும் குணாதிசயத்திலான வேறுபாடுகளால், அவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வேடிக்கைகளும் நிறைந்து காணப்படுகின்றன. திருமணத்துக்குப் பின் Jeff புதிய வீட்டை வாங்கி, சீனாவில் குடியேறி வாழ்கிறார். குடும்ப வாழ்க்கையின் இன்பம் மற்றும் உறுதிப்பாட்டினால், தனது ஆர்வமுள்ள விடயங்களில் ஈடுபட அவருக்கு அதிகநேரம் கிடைத்துள்ளது. சீனாவுக்கு வரும் முன்னர், ஆஸ்திரேலியாவின் செய்தி ஊடகம் ஒன்றில் பதிப்பாசிரியராக அவர் வேலை செய்திருந்தார். SHEN ZHEN நகரில் வெளிநாட்டவர்கள் அதிகமாகி வருகின்றனர். சீனா பற்றிய தகவல்களுக்கான அவர்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று திருமணத்துக்குப் பின் Jeff கண்டறிந்தார். இதனால், செய்தி ஊடகத்தில் பணிபுரியும் எண்ணம் மீண்டும் அவரது மனதில் ஏற்பட்டது. நண்பர் ஒருவரின் பரிந்துரை மூலம், ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி ஊடகத்தில் பணிபுரியும் தனது செழிப்பான அனுபவங்களை சார்ந்து, SHEN ZHEN நாளேடு நிறுவனத்தில் பிழை திருத்த பதிப்பாசிரியர் பணியை அவர் பெற்றார். 1 2 3 4
|
|