• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-17 18:02:34    
சீனத் தமிழொலி எப்படி நன்றாக நடத்துவது பற்றிய உரையாடல்

cri

கலை.........வணக்கம் பிரியமான நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.
தமிழன்பன்........ 2008ம் ஆண்டின் துவக்கத்தில் ஒலிபரப்பப்படும் முதலாவது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி இதுவாகும்.
செல்வம்...... சரியாக சொன்னீர்கள் தமிழன்பன். கடந்த ஆண்டில் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலம் நாங்கள் பல தகவல்களை அறிந்து கொண்டுள்ளோம். இவ்வாண்டுக்கான முதலாவது நிகழ்ச்சியில் சீனத் தமிழொலி பற்றி விவாதிப்பது சால சிறந்ததாகும்.
தமிழன்பன்.......இவ்வாண்டுக்கான முதலாவது நிகழ்ச்சி என்ற முறையில் சீனத் தமிழொலி பற்றி விவாதிப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அல்லவா?
கலை........நீங்கள் இருவரும் கூறிய சீனத் தமிழொலி பற்றிய விவாதத்திற்கான மதிப்பீட்டிற்கு உடன்படுகிறேன். கடந்த ஆண்டில் சீனத் தமிழொலி தாமதமின்றி வெளியிடுவதை நாங்கள் நனவாக்க வில்லை. கடந்த ஆண்டின் மூன்றாவது நான்காவது சீனத் தமிழொலி பத்திரிகைகளை இன்னும் நேயர்களுக்கு அனுப்ப வில்லை. ஆனால் விரைவில் அவர்களின் கையில் சீனத் தமிழொலி பத்திரிகைகள் தவழ வேண்டும் என்று விரும்புகின்றேன்.


தமிழன்பன்........ஆமாம். இவ்விரண்டு பத்திரிகைகளையும் நானும் கிளீடஸும் இரண்டு முறை சரிப்பார்த்தோம். பத்திரிகையில் வெளிவந்துள்ள படைப்புக்கள் மற்றும் கருத்துக்கள் செழுமையானவை. அவை நேயர் நண்பர்களுக்கு சீனா பற்றி அறிய துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.
செல்வம்.......இவ்விரண்டு பத்திரிகைகளையும் சீக்கிரமே பெற ஆசைபடுகின்றேன் என்று நேயர்களின் சார்பில் கருத்து தெரிவிக்கின்றேன். சீனத் தமிழொலி என்ற பத்திரிகையை இதழ் வடிவில் மாற்றலாமே என்று இங்கே நான் முன்மொழிகின்றேன்.
தமிழன்பன்........செலவம் உங்கள் ஆலோசனை மிகவும் அருமையானது. இதழ் வடிவில் இருந்தால் நேயர்கள் வெளியே போகும் போது எடுத்து செல்வது வசதியாகின்றது.
செல்வம்..........வெளியே எடுத்து செல்வது வசதி மட்டுமல்ல நன்றாகவே பாதுகாத்து மற்றவர்களுக்கு எளிதாக வழங்கவும் முடியும்.

1 2 3 4