கலை.......இதை நாங்கள் ஏற்கனவே கருத்தில் கொண்டுள்ளோம். சென்ற ஆண்டு துவக்கத்தில் இதை இதழாக மாற்ற வேண்டும் என்று தொடர்புடைய பணியகத்திடம் கோரிக்கையாக முன்வைத்தோம். ஆனால் 2006ம் ஆண்டில் அத்திட்டம் பற்றி முடிவு செய்யப்பட வில்லை என்ற காரணத்தால் கடந்த ஆண்டில் பத்திரிகையை இதழாக மாற்றுவதென்ற ஆர்வம் நனவாக வில்லை. இவ்வாண்டு இந்த பிரச்சினை நிலவ வாய்ப்பில்லை. இவ்வாண்டு முடிவடைவதற்கு 6 திங்களுக்கு முன்பே இந்த திட்டத்தை முன்வைத்தோம். எனவே இப்போது அனுமதி வாங்கிவிட்டோம். இவ்வாண்டில் முதலாவதாக இதழ் வடிவத்தில் சீனத் தமிழொலி நேயர்களிடையில் தவழ்ந்து ஆர்வத்தை அதிகமாக்கும் என்று நம்புகின்றேன். தமிழன்பன்.......நல்ல செய்தி தமிழொலி பத்ததிரிக்ை இதழ் வடுவத்தில் வெளிவருவது என்பது இவ்வாண்டின் துவக்கத்தில் தமிழ்ப் பிரிவுக்கு கிடைத்த முதலாவது சிறந்த செய்தியாகும். நேயர் நண்பர்கள் அனைவரு இந்த செய்தியை கேட்டு கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார்கள்.
செல்வம்........ உண்மைதான். இந்த நல்ல செய்தியைக் கேட்டு யாவரும் மகிழ்ச்சியடைவார்கள். கலை........இந்த நல்ல செய்தி அநைவருக்கும் மகிழ்ச்சி தந்தாலும் கூடவே கடமைகளையும் கொண்டு வருகின்றது. நாங்கள் இதழை நடத்தினால் அதற்கான படைப்புக்களை அதிகரிக்க வேண்டும். இப்போது உள்ள உள்ளடக்கங்களை மட்டுமே வைத்துக் கொண்டு இதழை உருவாக்க முடியாது. ஆகவே இதழை சிறப்பாதையாக வெனிக்கொண்ர நாங்கள் மட்டுமல்ல நேயர் நண்பர்களும் தங்கள் படைப்புக்களை மூலம் உதவி வழங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம்.
1 2 3 4
|