சீனத் தமிழொலி எப்படி நன்றாக நடத்துவது பற்றிய உரையாடல்
cri
செல்வம்.........இதில் பிரச்சினை ஏதும் இல்லை. இது பற்றி மேலும் கூடுதலாக கருத்து சொல்ல நான் ஆசைபடுதின்கேன்ய சீனத் தமிழொலியின் வடிவ மாற்றம் வெற்றிபெற வேண்டுமெனில், அதன் உள்ளடக்கத்தில் நேயர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நேயர் மன்றக் கூட்டங்கள் நடைபெறும்போது அதன் விபரங்களை நிழற்படங்களுடன் நேயர்கள் அனுப்பி வைக்கலாம். பல ஆண்டுகளாக சிறப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டு வரும் மன்றங்களின் பல்வேறு சாதனைகளை மன்றப் பொறுப்பாளர்கள் எழுதலாம். மேலும், சாதனை நேயர்கள், தங்களின் வானொலியுடனான உறவு பற்றிய கட்டுரைகளையும் இதில் வெளியிடலாம்.
கலை.......செல்வம் நீங்கள் குறிப்பிட்ட படைப்புக்கள் அனைத்தும் வரவேற்கக் கூடியவை. தமிழன்பன்.......இவ்வாண்டில் இதழ் வெளியீடு உன்தைமாக அமைய நேயர்களிமிடந்தான உதவி ்திகமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம். செல்வம்.......எங்கள் உதவி என்றும் நிச்சயம் உண்டு. நாங்கள் ஒன்றுப்பட்டு தமிழ் ஒலிபரப்பின் வளர்ச்சிக்காக என்றும் பாடுபடுவோம். கலை.......நிகழ்ச்சி மூலம் 2008ம் ஆண்டில் சீனத் தமிழொலி இதழை சீர்திருத்துவது பற்றி நேயர்களுக்கு விளக்கிக் கூறியுள்ளோம். தமிழன்பன்........நிகழ்ச்சியை கேட்ட பின் இதழுக்கு உகந்த தகவல்களை தாராளமாக எங்களுக்கு அனுப்பி வையுங்கள். செல்வம்.........இதழ் நன்றாக வெளிவருவதற்கு நாங்கள் இயன்றதனைத்தையும் செய்வோம் என்று நேயர்களின் சார்பில் வாக்குறுதி அளிக்கின்றேன். கலை.......இன்றைய நிகழ்ச்சி பற்றி விவாதிப்பதன் மூலம் சீன தமிழொலி என்ற இதழை செவ்வனே செய்வதில் நம்பிக்கை எங்களுக்கு அதிகரித்துள்ளது. இதை இவ்வாண்டின் சிறந்த துவக்கமாக கருதி தமிழ் ஒலிபரப்பின் வளர்ச்சியை எதிர்பார்ப்போமாக. செல்வம்........நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. தமிழன்பன்.......பிரியமான நேயர்களே. இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி இத்துடன் நிறைவடைகின்றது. கலை......அடுத்த வாரம் சனிக் கிழமை மீண்டும் சந்திப்போம். 1 2 3 4
|
|