• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-17 18:02:34    
சீனத் தமிழொலி எப்படி நன்றாக நடத்துவது பற்றிய உரையாடல்

cri

செல்வம்........இதழ் வெளியிடுவதில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
தமிழன்பன்........இது பற்றி நான் முதலில் கருத்து தெரிவிக்கலாமா£ந
கலை..... ஓ. தாராளமாக.....
தமிழன்பன்........இதழ் ஒன்றை நன்றாக அச்சிட வேண்டுமாயின் முதலில் அச்சிடுவதற்களை படைப்புக்ககளை தேர்வு செய்ய வேண்டும்.
கலை.......ஆமாம். இதுவே எங்கள் கருத்தாகும்.
செல்வம்........இதழில் வானொலியில் ஒலிபரப்பப்ட்ட கட்டுரைகளில் சிறந்தவற்றை தேர்வு செய்வது மட்டுமல்ல. நேயர் மன்றத்தின் வளர்ச்சி முக்கிய நேயர்களின் தனிப்பட்ட தகவல்கள் பின்னணிகள், பொது அறிவுப் போட்டி பற்றிய தகவல்கள், சீனாவில் முக்கிய சுற்றுலா இடங்களின் தகவல்கள் முதலியவை அடங்க வேண்டும் என விரும்புகின்றேன்.
கலை.......செல்வம் உங்கள் ஆலோசனை சிறப்பானது. இவ்வாண்டுக்கான இதழில் பாண்டா ஊரான ஸச்சான் என்னும் பொது அறிவுப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற நேயர் பாண்டிசேரி என் பாலகுமார் எழுதிய கட்டுரை, பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றிய 4 கட்டுரைகள், கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நேயர் மன்ற கள ஆய்வின் முடிவுகள், சீனாவில் புகழ் பெற்ற சுற்றுலா இடங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளன.
செல்வம்........நீங்கள் கூறிய தகவல்களை கேட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இதை கேட்டால் நேயர்கள் அனைவரும் என்னை போல மகிழ்ச்சியடைவர் என்பதில் எனக்கு ஐயமில்லை.
தமிழன்பன்.......இந்த அருமையான திட்டத்தை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
செல்வம்.......இவ்வாண்டுக்கான முதல் இதழ் எப்போது பதிப்பித்து வெளியிடப்படும்?
கலை........இதற்குத் தேவையான படைப்புக்கள் கட்டுரைகள் தயாராக உள்ளன. நாங்கள் மிக விரைவில் இதழை வெளியிட உள்ளோம்.
தமிழன்பன்........படைப்புகள் கட்டுரைகளின் தரம் பற்றி கவலைப்படாதீர்கள். நானும் கிளீடஸும் அவற்றை மிக நன்றாக சரிபார்த்து தரமான முறையில் இதழை வெளியிட உதவுவோம்.
கலை.......நீங்கள் தெரிவித்த கருத்தை கேட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இதழின் தரம் கண்டிப்பாகவே நன்றாக இிருக்கும். ஆனால் இதழுக்குத் தேவைப்படும் படைப்புக்கள் அதிகம் எங்களுக்கு தேவை. வானொலியில் ஒலிபரப்பட்ட கட்டுரைகள் மட்டும் வெளியிடுவது போதாது. நேயர்களிடமிருந்து தகவல்கள் அதிகமாக பெற வேண்டும்.
தமிழன்பன்......நேயர்களே இனிமேல் உங்களது பங்களிப்புகள் மூலம் சீன தமிழொலி இதழ் மேலும் சிறப்புடன் வெளிவர வேண்டும் என்பது எமது விருப்பமாகும். உங்களது அன்பான ஆதரவை அதிகமாகவே எதிர்பார்க்கிறோம்.
1 2 3 4