• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-18 14:51:11    
சிங் இனத்தின் ஊர்

cri

சிங் இனம், சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாகும். சிங் இன மக்கள் தொகை சுமார் 20 ஆயிரமாகும். தென் சீனாவின் Wan Wei, Wu Tou, Shan Xin ஆகிய மூன்று தீவுகளில் சிங் இனம் வாழ்கின்றன. இன்றைய நிகழ்ச்சியில், Wan Wei என்ற கிராமத்தில், சிங் இனத்தின் நடையுடை பாவனைகளை உணர்ந்து கொள்வீர்கள்.
Wan Wei கிராமத்துக்குள் நுழைந்து, சாலைகளின் இரு பக்கங்களில், வடிசை வடிசையான மாடி வீடுகள் சீராக இருக்கின்றன. பல வீடுகளின் முன்புறத்தில், புதிய கார்கள் காணப்படுகின்றன. இக்கிராமத்தில் நெடுஞ்சாலைகள் மக்களுக்கு வசதி தந்துள்ளன. கிராமவாசிகள் சிலர், பதனீடுக்காக மீன்கள் மற்றும் சின்னஞ்சிறுகளை, வாகனங்களில் நகருக்குக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தனர். Wan Wei கிராமத்தின் பொறுப்பாளர் Su Ming Fang செய்தியாளரிடம் பேசுகையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், Wan Wei கிராமம், ஒரு பின்தங்கிய சிறு மீன் கிராமமாக இருந்தது என்றும், தலைமுறை தலைமுறையாக கடலுக்கு அருகில் வாழ்ந்து வந்த கிராமவாசிகள், மீன் பிடிப்பில் ஈடுபட்டதன் மூலம் வாழ்க்கை நடத்திருந்தனர் என்றும் குறிப்பிட்டார். கடலுக்கு அருகில் உள்ள மணில் alkali அதிகமாக இருப்பதால், தானியம் பயிரிடுவது கடினம். கிராமவாசிகள் மீன்களுக்குப் பதிலாக, தானியத்தைப் பெறும் வகையில், மலைப் பிரதேசத்துக்கு பல பத்து லீ நடந்து செல்ல வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.


கடந்த நூற்றாண்டின் 60ஆம் ஆண்டுகளில், கடலிலிருந்து நிலம் மீட்கப்பட்டதன் மூலம், Wan Wei, Wu Tou, Shan Xin ஆகிய மூன்று தீவுகள், அணைக்கட்டுகள் மூலம், பெருநிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. விளை நிலங்கள் மடங்குகளாக அதிகரித்துள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் நடைமுறைக்கு வரத் துவங்கிய சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையினால், சிங் இனம் வாழும் மூன்று தீவுகளில் செழுமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சீனாவுக்கும் வியட்நாம்க்குமிடை எல்லை வர்த்தகம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. அரசு சலுகை கொள்கை வழங்குகிறது. இவற்றின் காரணமாக, விரைவாக செல்வமடைதல் பற்றிய சிங் இன மக்களின் நம்பிக்கை வலுப்பட்டுள்ளது. Wan Wei கிராமம், கடல் மற்றும் எல்லைப்பகுதிக்கு ஒட்டியமைந்துள்ளது என்ற மேம்பாட்டைப் பயன்படுத்தி, கிராமவாசிகள் சிலர், mudflat வளர்ப்பு, marine food products பதனீடு உள்ளிட்ட தொழில்களை வளர்த்துள்ளனர்.

1 2 3 4