• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-18 14:51:11    
சிங் இனத்தின் ஊர்

cri

"ஒவ்வொரு திங்களின் 10ஆம் நாள், 20ஆம் நாள் மற்றும் 30ஆம் நாள், இந்நடவடிக்கை மூன்று முறைகளாக நடைபெறுகிறது. எங்கள் கிராமத்தின் பாடகர்கள், பிற கிராமங்களின் பாடகர்கள், உறவினர்களைப் பார்க்க வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பும் சீனர்கள் இந்நடவடிக்கையில் கலந்து கொள்கின்றனர்" என்றார், அவர்.
எல்லை வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் தொழில், Wan Wei கிராமத்தின் சிங் இன மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. தற்போது Wan Wei கிராமத்தின் நிலைமை பற்றி, Zheng Xian Fang என்னும் 64 வயதான கிராமவாசி கூறியதாவது: 


"எங்கள் வாழ்க்கை நாளுக்கு நாள் மேம்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் உயர்ந்த கட்டிடங்கள் எங்கெங்கும் காணப்படுகின்றன. கிராமத்தில் கார்கள் இருக்கின்றன. தற்போது நாமும் என் குடும்பத்தினரும் மாடி வீடுகளில் வசிக்கின்றோம். என் குடும்பத்துக்கு தரமான கார் உண்டு. மூன்று புதிய மிதிவண்டிகளும் இரண்டு துள்ளுந்துகள் உண்டு. என் குடும்பத்தில் 6 பேர் இருக்கின்றனர். எங்கள் வாழ்க்கை நிலை பெருமளவில் உயர்ந்துள்ளது. முன்பு, இக்கிராமத்தின் குடும்பங்களுக்கு இப்பொருட்கள் இல்லை" என்றார், அவர்.
Wan Wei கிராமத்தில், முன்பு மக்கள் தாழ்ந்த witch grass hutகளில் வசித்தனர். தற்போது சுமார் 90 விழுக்காட்டு விவசாயக் குடும்பங்கள், கற்காரை கட்டிடங்களில் வசிக்கின்றன. தற்போது, ஒவ்வொரு குடும்பத்திலும் தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது. Wan Wei கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் செல்லிடபேசிகள் உள்ளன. இது வசதி தந்துள்ளது. இளைஞர்கள் தத்தமது வீட்டில் இணையம் மூலம், வெளிப்புறத் தகவலை அறிந்து கொள்ள முடியும்.
கிராமவாசிகளின் வாழ்க்கை மேம்படுவதுடன், அவர்களின் மனோ நிலை மேம்பட்டுள்ளது. கிராவாசிகளின் ஆன்மீக உலகத்தை செழிப்பாக்க, இக்கிராமத்தின் பொறுப்பாளர்கள் வழிமுறையை நாடுகின்றனர். இக்கிராமத்தின் பொறுப்பாளர் Su Ming Fang கூறியதாவது:

1 2 3 4