பெய்ஜிங் வந்தவுடன் 5 வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடியையும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கொடியையும் நகரின் எல்லா இடங்களிலும் அவரால் காண முடிந்தது. சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டள்ள ஒலிம்பிக் விளையாட்புப் போட்டியின் விளம்பர பலகைகளையும் பல்வேறு நாட்டு விளையாட்டு வீரர்களின் பதாகைகளையும் அவர் கவனித்தார். மேலும் சாலைகளில் சென்ற வாகனங்களில் பறந்து கொண்டிருந்த சிறிய ஒலிம்பிக் மற்றும் சீனத் தேசியக் கொடிகளை கண்டார். இவையனைத்தும் ஒலிம்பிக்கை வரவேற்பதில் பெய்ஜிங் காட்டிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் உணரச் செய்துள்ளன. அது பற்றி அவர் கூறியதாவது
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்காக பெய்ஜிங் மேற்கொண்ட ஆயத்த பணிகளை நாங்கள் கவனித்து வருகிறோம். சீன வானொலி உள்ளிட்ட சீன செய்தி ஊடகங்களுடன் நாங்கள் நன்றாக ஒத்துழைத்துள்ளோம். சீனாவில் நான் பல முறை பயணம் செய்துள்ளேன். ஒவ்வொரு முறையும் பெய்ஜிங்கில் ஏற்பட்ட மாற்றங்களையும் நகர் மிகவும் தூய்மையாக இருந்ததையும் நான் பார்த்துள்ளேன். குறிப்பாக பெய்ஜிங் நகரவாசி ஒவ்வொரின் முகத்திலிருந்தும் ஒலிம்பிக் மீதான எதிர்பார்ப்பை நான் கண்டு உணர முடிந்தது என்றார் அவர்.
1 2 3 4
|