விளையாட்டு அரங்கில் எனது நாட்டின் பெயரை கேட்ட போது உணர்ச்சிபூர்வமான மகிழ்ச்சி வெளிப்பாடு மனதின் ஆழத்திலிருந்து இயல்பாக காட்டப்பட்டது. நான் எழுந்து நின்று எனது நாட்டு பிரதிநிதிக் குழு உறுப்பினர்களுக்கு கையசைத்து தேசிய கொடியையும் அசைத்து ஊக்கமூட்டினேன். பறவை கூடு விளையாட்டு அரங்குக்கு நேரடியாக வந்து துவக்க விழாவில் கலந்து கொண்டமை மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. தொலைகாட்சி மூலம் துவக்க விழாவை கண்டு இரசிக்கும் போது நேரடியாக காணும் உணர்வை பெற முடியாது என்றார் அவர்.
கென்யா தடகள போட்டியில் மிக வலிமையானது. பிரதிநிதி குழுவில் தடகள வீரர்கள் அதிகம் பேர் இடம் பெற்றிருப்பதை பார்த்தால் இது தெளிவாக புரிகிறது. தமது விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்த அதேவேளையில் சீன வீரர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனத் தொழில் நுட்பத்தை முழுமையாக வெளிகாட்டி நல்ல சாதனைகளை வெல்லவும் வாவேரு வாழ்த்தியுள்ளார். 1 2 3 4
|