
சீனாவுக்கும் கென்யாவுக்குமிடையில் பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் நிலவுகின்றது. பண்பாட்டில் மாபெரும் வேறுபாடுகளும் உள்ளன. ஆனால் 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் அரங்கேற்றப்பட்ட தலைசிறந்த கலை நிகழ்ச்சிகளை பார்த்த பின் செழுமையான பல்வகை அம்சங்கள் கொண்ட சீனப் பண்பாட்டை அவர் அறிய வந்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது.
கலை நிகழ்ச்சி அரங்கேற்றம் அற்புதமான முயற்சியாகும். புத்தாக்க படைப்பாற்றல் நிகழ்ச்சி முழுவதும் நிறைந்து காணப்பட்டது. கலை நிகழ்ச்சியின் அரங்கேற்றம் மூலம் அருமையான அலங்கார ஆடைகளையும் இனிமையான இசையையும் நாங்கள் இரசித்தோம். சீனா அதன் மிக ஆழந்த செழுமையான பண்பாட்டு வரலாற்றை உலகத்திற்கு வெளிகாட்டியுள்ளது என்று வாவேரு கூறினார்.
விளாயாட்டு அரங்கில் நடைபெற்ற துவக்க விழாவில் வீரர்களின் அணிவகுப்பின் போது சொந்த நாட்டு பெயரை கேட்டு சக நாட்டு வீரர்களையும் கண்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அது பற்றி அவர் கூறியதாவது.
1 2 3 4
|