பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஆகஸ்ட் திங்களில் நடைபெறவுள்ளது. தற்போது, ஒலிம்பிக் விளையாட்டு அரங்கு மற்றும் திடல்களின் கட்டுமானப் பணி இறுதி கட்டத்தில் நுழைந்துள்ளது. சீன தேசிய விளையாட்டு அரங்கு மட்டும் கட்டியமைக்கப்பட்டு வருகின்றது. மற்ற விளையாட்டு அரங்குகளின் கட்டுமானப் பணியும் நிறைவேறியுள்ளது. இந்த விளையாட்டு அரங்குகளின் கட்டுமானத்திலும் இயக்கத்திலும் அதிக உயர் அறிவியல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எரியாற்றல் சிக்கனம், உயர் பயன், பாதுகாப்பு ஆகியவை படைத்த பசுமை ஒலிம்பிக் கருத்து இதில் காணப்படுகின்றது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்போட்டியின் முக்கிய விளையாட்டு அரங்கான சீனத் தேசிய விளையாட்டு அரங்கின் கட்டுமானத்தில் இரும்புருக்கு பகுதி மிக முக்கியமானது. முழு இரும்புருக்கு கட்டுமானப் பகுதியின் அகலம் சுமார் 340 மீட்டராகும். உயரம் 68 மீட்டராகும். இதன் மொத்த எடை 42 ஆயிரம் டன்னாகும். இவ்வளவு எடையுள்ள இரும்புருக்கு பகுதியில், தூண்கள் ஒன்றும் இல்லை. இதன் உட்புறத்தின் வலைப்பின்னல் கட்டுமானத்தால் எடை தூக்கப்படுகின்றது. ஆகவே கட்டுமானத்தில் மிக வலிமையான Q430E ரக இரும்புருக்கு உற்பத்தி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சீனாவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட இந்த வகை இரும்புருக்கு, உற்பத்தி பொருள் ஒவ்வொரு சதுர மில்லி மீட்டரும் 46 கிலோகிராம் எடையைச் சுமக்கலாம். சீனத் தேசிய விளையாட்டு அரங்கு கட்டுமானப் பணியின் பொறுப்பாளரும், பெய்ஜிங் நகர கட்டுமான குழுமத்தின் துணை தலைமை பொறியியலாளருமான li jiu lin கூறியதாவது
இதுவரை, நாங்கள் பயன்படுத்திய Q430E ரக இரும்புருக்கு, உற்பத்தி பொருள் வரையறைக்கு 100 விழுக்காடு தரமானது என்றார் அவர்.
1 2 3 4
|