• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-26 16:51:44    
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பயஉயர் அறிவியல் தொழில் நுட்பங்கள்

cri

தவிர, அனைத்து ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளிலுமுள்ள காட்சி தளங்களில் மழை நீர் அல்லது தூய்மைப்படுத்தப்பட்ட கழிவு நீர் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேசை பந்து மற்றும் பூ பந்து போட்டிகள் நடைபெறும் அரங்குகளின் உட்புற சுற்றுச்சூழலுக்கு குறிப்பாக, அரங்குகளில் காற்று ஓட்ட வசதிக்கு உயர் கோரிக்கை உள்ளன. ஏனென்றால், காற்று ஓட்டம் ஓரளவு தீவிரமடைந்தால், மேசை பந்து அல்லது பூ பந்தின் பாதையை மாற்றக் கூடும். இது போட்டிக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

ஆகையால், இவ்விரண்டு போட்டிகளை நடத்தும் பெய்ஜிங் பல்கலைக்கழக விளையாட்டரங்கும், பெய்ஜிங் தொழில் துறை பல்கலைக்கழக விளையாட்டரங்கும் உட்புற காற்று பதனாக்கி வசதியை மேம்படுத்தியுள்ளன. காற்று பதனாக்கிகளின் காற்று விநியோக வழிகள் அரங்கிலுள்ள பார்வையாளர்களின் இருக்கைகளின் கீழ் மற்றும் பக்கங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காற்று விநியோக வழிகளின் எண்ணிக்கை மொத்தம் 9100ஐ எட்டியுள்ளது. குளிர் காற்றை வழங்கும் நிலப்பரப்பு அதிகரிப்பதோடு காற்றின் வேகம் குறைக்கப்பட்டது. இதனால், போட்டியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்கான தாக்கமும் குறைக்கப்பட்டது. விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். பார்வையாளர்கள் வசதியான சூழ்நிலையில் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். ஆடவருக்கான மேசை பந்து உலக கோப்பை சாம்பியன் பட்டம் பெற்ற wang hao கூறியதாவது

முந்தைய போட்டிகளில், காற்று பதனாக்கி பயன்படுத்தப்பட்ட போது, காற்று அளவு அதிகம் என்பதை உணர்ந்திருந்தேன். இந்த அரங்கில், காற்று பதனாக்கி மிக அதிக அளவில் பயன்படுத்தாலும், காற்றின் வீச்சை உணரவில்லை. போட்டியில் ஈடுபடும் போது, கவலை ஒன்றும் இல்லை என்றார் அவர்.

1 2 3 4