ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் பூப் பந்து மற்றும் கலை ஜம்நாஸ்திக்ஸ் போட்டிகள் பெய்ஜிங் தொழில் துறை பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளன. இந்த அரங்கின் கூரை இறகை போல் உலகுவானதாகவும் அழகாகவும் உள்ளது. பெய்ஜிங் கட்டுமான பொறியியல் ஆய்வகம் இக்கட்டிடத்தை வடிவமைத்தது. இதன் துணைத் தலைமை பொறியியலாளர் முனைவர் qin jie கூறியதாவது
இவ்வரங்கின் கூரை, ஒரே ஒரு மாடி உள்ளது. கிழே உள்ள பகுதிகள், இந்த ஒரே மாடிக்கு மீள் சக்தியுள்ள பல ஆதரவுகளை வழங்குகின்றது. பார்ப்பதற்கு மிக எளிமையானது என்றார் அவர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கு மற்றும் திடல்களின் கட்டுமானத்தில், உயர் அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதை தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் எரியாற்றலின் சிக்கனத்திலும் கவனம் செலுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, சீனாவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட சூரிய ஒளி ஆற்றலை உட்புகுத்த பயன்படுத்தும் கண், பல விளையாட்டரங்குகளின் வெபிப்புற பகுதிகளில் பொருட்டப்பட்டது. இவை தூயமையான மின்னாற்றல் வழங்கலாம். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாதுகாப்பு நிபுணர் குழு உறுப்பினர் ma xin கூறியதாவது
10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புடைய கட்டிடத்தில், சூரிய ஆற்றல் மூலம் ஆயிரம் கிலோவாட் மின்சாரத்தை பிறப்பிக்கலாம். வெப்ப வசதி, குளிர் காற்று வசதி போன்றவற்றின் எரியாற்றலுக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேறலாம் என்றார் அவர்.
1 2 3 4
|