எல்லாவற்றையும் தாண்டி செல்வது, பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய நோக்கமாகும். இடர்களை எல்லாம் சமாளிப்பது, தனது நிலையை தாண்டி செல்கின்ற மேலும் விரைவாக, மேலும் உயர்வாக, மேலும் வலிமையாக என்ற குறிக்கோள் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய அம்சமாகும்.
தாண்டிச் செல்வது, என்பது உடல் ரீதியாக தாங்கள் சந்திக்கும் தடைகளைச் சமாளிக்கும் ஊனமுற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளின் துணிவு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. தவிர, சுய வலிமையோடு விடா முயற்சி செய்து தேசிய எழுச்சியையும், உறுதியாக போராடும் மனப் பான்மையின் வளர்ச்சியையும் இது முழுமையாக காட்டுகின்றது.
நான் தேசிய இளைஞர் கூடைப் பந்து விளையாட்டின் போது, பந்து போடப்படும் வளையத்தில் தொங்கி இலக்கை நிறைவு செய்தவராகும். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது எனது கனவாகும். நான் பார்வையற்றவர் என்ற உடல் ரீதியாக குறையிலிருந்து முன்னேறி குறிக்கோளை இதயத்தில் சுமந்து பாடுபடுகின்றேன். உடல் ரீதியான தடைகளைச் சமாளிப்பது மட்டுமல்ல, மன உறுதியைப் பயன்படுத்தி கனவுகளை நிறைவேற்ற வேண்டும். எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும், என்னால் இயன்ற அளவில் விளையாடுவதை தவிர போட்டியை கைவிடபோவதில்லை என்றார் அவர்.
உடல் ரீதியான சிக்கல்களை சமாளிப்பது மட்டுமல்ல, ஊனமுற்றோர் சொந்த மன உறுதியை நிலைநிறுத்துவது மிகவும் தேவைப்படுகின்றது. ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது, மிகவும் சிறப்பானது. சிக்கல்களைச் சமாளித்து, மன உறுதி, தொழில் நுட்பம் மற்றும் உடல் திறனின் மூலம் தங்களிடமுள்ள உள்ளார்ந்த ஆற்றலுக்கு அறைகூவல் விடுத்து, மக்களின் புத்தாக்க ஆற்றல் மற்றும் மனித குலத்தின் மதிப்புகளை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்று சீன ஊனமுற்றோர் சம்மேளனத்தின் தலைவரும், ஐ.நா மனித நேய விருதை பெற்றவருமான dengpufang தெரிவித்தார்.
ஒன்றிணைவது, பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மூன்று கருத்துக்களில் ஒன்றாகும். ஒலிம்பிக்கின் ஒற்றுமை, அமைதி மற்றும் இணக்கம் போன்ற மதிப்பீடுகளின் ஒன்றிணைப்பை இது காட்டுகின்றது. மக்களுக்கிடையிலும், மக்களுக்கும் சமூகத்துக்குமடையிலும், மக்களுக்கும் இயற்கைக்குமிடையிலுமான ஒன்றிணைப்பு இதில் அடங்கியுள்ளது.
1 2 3 4
|