• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-06 21:31:33    
பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சிறப்பு நிகழ்ச்சி ஆ

cri

கடந்த சில ஆண்டுகளில், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சீன சமூகம் ஊனமுற்றோரில் கவனம் செலுத்தி வருகிறது. ஊனமுற்றோர் இலட்சியம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பாதுகாக்கும் வகையில், சீன அரசு அதிகமான நிதியை ஒதுக்கிவைத்து, தொடர்புடைய கொள்கைகளை மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பெய்ஜிங் மாநகரின் ஊனமுற்றோருக்கு உதவும் கொள்கைகள், ஊனமுற்றோருக்கான வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடையவை. இது குறித்து, பெய்ஜிங் மாநகரின் ஊனமுற்றோர் சம்மேளனத்தின் பொறுப்பாளர் zhaochunluan அம்மையார் கூறியதாவது:

சீன சமூகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளில், சமூகக் காப்புறுதி, ஊனமுற்றோர் வேலை வாய்ப்பு, சமூக வாழ்விலான ஊனமுற்றோரின் சமத்துவ முறை ஆகியவை இதில் அடங்குகின்றன என்று அவர் கூறினார்.

இவ்வாண்டின் ஏப்ரல் திங்களில், ஊனமுற்றோருக்கான உத்தரவாத சட்டத்தை சீன சட்டமியற்றல் நிறுவனம் திருத்தியது. ஊனமுற்றவர்களுக்கான சமூகக் காப்புறுதி மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டின் ஜூன் திங்கள், ஊனமுற்றோர் உரிமையின் ஒப்பந்தத்துக்கு சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி அனுமதி வழங்கியது. ஐ.நாவின் வரலாற்றில், ஊனமுற்றோர் உரிமையை முழுமையாகப் பாதுக்காக்கும் முதலாவது சர்வதேச சட்ட ஆவணம் இதுவாகும். சீன துணை வெளியுறவு அமைச்சர் wudawei கூறியதாவது:

இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்குவது, முழு சமூகத்திலும் ஊனமுற்றோரின் உரிமை மற்றும் கௌரவத்துக்கு மதிப்பு அளிக்கும் சிறந்த வழக்கங்கள் உருவாக்குவதற்கு நலன் தரும். தவிர, சீன ஊனமுற்றோருக்கான காப்புறுதி இலட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இது துணை புரியும் என்றார் அவர்.

1 2 3 4