பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மூன்று மதிப்பீடுகளில் ஒன்றான பொதுவாக அனுபவிப்பது என்பதில் ஊனமுற்றோரும் பொது மக்களும் சேர்ந்து கூட்டாக ஒரே உலகத்தை நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் முக்கிய கருத்து முழுமையாக வெளிக்கொணரப்படுகின்றது. ஊனமுற்றோரும் உலக மக்களும் ஒலிம்பிக் விளையாட்டிலும் சமூக வாழ்க்கையிலும் சமமான உரிமையை பெற இது வலியுறுத்துகிறது.
ஒலிம்பிக் மகிழ்ச்சியை ஊனமுற்றோர் அனுபவிக்க துணை புரியும் வகையில் பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் அரங்குகள், திடல்கள், செய்தி ஊடகச் சேவை, குடியிருப்புகள், போக்குவரத்து முதலியவற்றில் தடையில்லாமல் செல்லும் சேவை வசதிகள் வழங்கப்படுகின்றன. மூன்று முறை ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட உக்ரேன் கூடைபந்து வீரர் விக்தோர் செர்போவ் விளையாட்டு அரங்கு பற்றி கூறியதாவது.
நான் பெய்ஜிங் வந்த பின் இந்த நாட்களில் இரண்டு முறை அரங்கிற்கு போய் வந்தேன். அங்கே வசதி மிக சிறப்பானது. என் மனதில் ஆழமான பதிவு தரும் அரங்குகளாக இவை திகழ்கின்றன என்றார் அவர்.
பெய்ஜிங் ஊனமுற்ற வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் தங்கியிருக்கும் கிராமத்தில் விளையாட்டு வீரர்களின் தேவை போதியளவில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 42 கட்டிடங்களில் விளையாட்டு வீரர்கள் சென்று வெளியேறுவதற்கு வசதி தரும் வகையில் முதல் மூன்று மாடிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அறையின் கதவு சாதாரண கதவை விட 10 விழுக்காட் மேலாக அகன்று திறக்கும் படியுள்ளது. அறைக் கதவின் கைப்பிடிகளும் தாழ்வான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. குளியலறையில் குறிப்பாக நாற்காலி உள்ளது. குளிப்பதற்கு நீர் வரும் குழாய் உயரமாகவும் தாழ்வாகவும் செயல்படும் முறையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அருமையான மானிட அக்கறையை கண்டு ஸ்லோவேனிய வட்டு எறிதல் வீரர் ஜோசே பிஃலெரி உயர்வாக மதிப்பிட்டார். அவர் கூறியதாவது.
ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்தின் சேவை மிகவும் சிறப்பாக உள்ளது. இங்கே வழங்கப்படும் சேவை தரம் 5 நட்சத்திர நிலையை எட்டியுள்ளது. நீங்கள் இங்கே வரா விட்டால் மிகவும் வருந்த போவது உறுதி என்றார் அவர்.
1 2 3 4
|