உடல் நலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் கால் இறகு பந்து
cri
 "சிறிய இறகு பந்து, வண்ணமயமான இறகுகள், விலை மலிவு, விளையாட தேவையான இடப்பரப்பு குறைவு. நீ காலால் உதைத்து, நான் காலால் உதைத்து விளையாடும் கால் இறகு பந்து, எங்கள் புன்னகைக்கு நடுவில் பறக்கிறது. கால் மற்றும் மூளை பயிற்சி செய்வதால், 80 வயதிற்கு வந்தாலும், முதியோராக தெரிவதில்லை." கால் இறகு பந்து விளையாட்டு, சீனாவில் பரவலாக விளையாடப்படும் ஒரு விளையாட்டாகும். 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறுடைய இவ்விளையாட்டு, கற்றுக் கொள்வதற்கு மிகவும் எளிமையானது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்த விண்ணப்பம் செய்த போது சீனாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சாங் யீ மோவ் எடுத்த பிரசாரத் திரைப்படத்தைப் பார்த்திருந்தால், மூதாட்டி ஒருவர், இறகு பந்தை உதைக்கும் காட்சி உங்கள் நினைவில் இருக்கலாம். அந்தக் காட்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தாலும், வெளிநாட்டு நண்பர்கள் பலருக்கு சீனாவின் பாரம்பரிய கால் இறகு பந்து விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 1 2 3 4
|
|